தொழில்வாய்ப்புக்கள்

careers
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » தொழில்வாய்ப்புக்கள்

DSI பணியிடம

அலுவலக-குடும்ப சமநில

DSI நிறுவனம் ஆரோக்கியமான ஒரு அலுவலக-குடும்ப சமநிலையைக் கொண்டிருக்கவேண்டியதன் பெறுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. ஆகவே எமது ஊழியர்கள் தமது பணியிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த சமநிலையைக் கொண்டிருப்பதற்கு உகந்த ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை தோற்றுவிப்பதில் நாம் பூரண அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

ஒவ்வொரு ஊழியரும் தமது வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வேறுபட்ட தேவைகளைக் கொண்டிருப்பதால் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றிற்கிடையில் முறையான சமநிலையைப் பேணுவதில் விசேட கவனம்செலுத்துகின்ற நாம் எமது ஊழியர்களின் தேவைகளைத் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்திவருகின்றோம். ஊழியர்களின் விசுவாசத்தை மேம்படுத்தல், அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் திருப்திகொண்ட அணியைப் பேணுதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் சிறந்த சமநிலைகொண்ட வாழ்வை முன்னெடுப்பதற்கு உகந்த பணிச்சூழலுடன் மகிழ்ச்சியும், மனத்திருப்தியும் நிறைந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு உகந்த சௌகரியமான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.