ஸ்தாபகர்

DSI என்ற தொழிற்துறை சாம்ராஜ்யம் ஒரே நாளில் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றல்ல. மாறாக மிகுந்த தீர்க்கதரிசனம் கொண்ட ஒரு நபரின் அயராத உழைப்பினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. ​ DSI என்ற வர்த்தகநாமத்தின் பெருமைமிக்க ஸ்தாபகரான அமரர் டி.எஸ். ராஜபக்ச (சமாதான நீதவான்) அவர்கள் தனது சிறு வயதிலேயே தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் வாழ்வாதாரத்தை சுமக்க வேண்டி ஏற்பட்டது.

dsi-founder
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » எமது விபரங்கள் » ஸ்தாபகர்

founderபெற்றோர் இருவரையும் தனது சிறு வயதிலேயே இழந்த திரு. டி.எஸ். ராஜபக்ச அவர்கள் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்ததுடன், DSI என்ற இலங்கையிலுள்ள மிகச் சிறந்த பாதணி நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு சிறந்த வாய்ப்புக்களை அவரது பாட்டி தொடர்ச்சியாக வழங்கி, அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

14 வயது முதலே சிறந்த சுய ஒழுக்கத்துடன் வளர்ந்த அவர் தனது சொந்த இடமான காலி முதல் கொழும்பு வரை தொழில்புரிவதற்காக பிரயாணங்களை மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து புறக்கோட்டையின் வீதிகளில் தனக்கென சொந்தமாக வெள்ளைத்துணி வியாபாரம் ஒன்றை அவர் ஆரம்பித்தார். பேரழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அவர் மீண்டும் காலிக்கு திரும்பவேண்டி ஏற்பட்டாலும், அவர் மீண்டும் கொழும்பு திரும்பி தனது வியாபாரத்தை மீளவும் ஆரம்பித்திருந்தார்.

புறக்கோட்டையில் அவர் பாதணி வியாபாரத்தை ஆரம்பித்து பிரபலமான ‘Ballerina’ செருப்புக்கள் போன்ற சர்வதேச நவநாகரிகங்களை இலங்கைக்கு தருவித்து DSI இன் அத்திவாரத்தை சிறப்பாக இட்டிருந்தார். இந்த வியாபாரத்துறையில் காணப்படும் வளர்ச்சிவாய்ப்புக்களை தெளிவாக இனங்கண்ட அவர் உள்நாட்டில் செருப்புக்களை தயாரிக்கும் முகமாக தனது முதலாவது தொழிற்சாலையை காலியில் ஆரம்பித்திருந்தார். விசுவாசமும், நட்புறவும் மிக்க பணிச் சூழலைத் தோற்றுவிக்கவேண்டும் என்ற அவரது தொலைநோக்கும், தரம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றில் நன்மதிப்புடைய உற்பத்தியை தயாரிப்பதும் மாபெரும் வெற்றிகளை அவருக்கு ஈட்டிக்கொடுத்ததுடன், 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிற்துறைக் கண்காட்சி ஒன்றின்போது காலஞ்சென்ற திருமதி. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்ததும் விசேட அம்சமாகும்.

சப்பாத்துகள் மற்றும் ஆடையணிகள் என DSI என்ற நாமம் உறுதியாகவும், அபரிமிதமாகவும் வளர்ச்சி கண்டது. வியாபாரம் பொங்கிப்பெருகிய போதும் திரு. டி. எஸ். ராஜபக்ச அவர்கள் காலியில் இருந்து வந்தபோது காணப்பட்ட எளிமையும், அடக்கமும் நிரம்பிய அதே மனிதராகவே விளங்கினார். தனது வளர்ச்சியினை தனது சொந்த நகரத்துடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் அங்கே ஏராளமானோருக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திய அவர் தனது நிறுவனத்தின் புகழினால் காலியை உலக வரைபடத்தில் புகழ்பெற்ற ஒரு நகரமாக மாற்றியமைத்தார். வர்த்தகநாமம் மற்றும் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தின் அளவிலா பெறுமதியை அவர் தெளிவாக இனங்கண்டார். இதனால் அவர் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தே தனது உற்பத்திகளை தயாரித்ததுடன், அவர்களது இதயங்களையும், மனங்களையும் வெல்வதை இலக்காகக் கொண்டே தனது விளம்பரங்களையும் முன்னெடுத்தார். வாய்ப்புக்களை தெளிவாகவும், துரிதமாகவும் இனங்கண்டு அதற்கேற்ற வகையில் செயற்படுகின்ற அவரது தனித்துவமான திறமையானது DSI இன் சிறப்பான எதிர்காலத்திற்கான சிறந்தொரு அத்திவாரத்தை இட்டுக்கொள்ள வழிவகுத்ததுடன், மீள்எழுச்சித்திறன்மிக்க வர்த்தகநாமத்தைக் கட்டியெழுப்பி இன்றும் தனது போட்டியாளர்கள் மத்தியில் உச்சத்தில் திகழும் பல்வேறுபட்ட நிறுவனங்களை ஸ்தாபிக்க வழிகோலியுள்ளது.

குடும்பம் விரிவடைந்த சமயத்தில் 1970 களில் அவரது பிள்ளைகளும் தமது தந்தை பேணிய விழுமியங்களை தொடர்ந்தும் கட்டிக்காத்த வண்ணம் அவருடன் வியாபாரத்தில் இணைந்துகொண்டனர். பாரபட்சமின்றி நடாத்தும் முறை, சம வாய்ப்பளித்தல், மாசற்ற ஒழுக்கம் மற்றும் இணையற்ற மட்டத்திலான வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் விசுவாசம் ஆகிய விழுமியங்களை அவர்கள் தொடர்ந்தும் சிறப்பாக பேணியவாறு வியாபாரத்தை முன்னெடுத்தனர்.

கடினமாக காலகட்டங்களில் எத்தனையோ தடைகளை எதிர்கொண்ட போதிலும் திரு. ராஜபக்ச அவர்கள் தனது நிலைபேற்றியல் பின்னணியுடனான வெற்றிச்சரிதத்துடன் தனது முயற்சிகளை சற்றும் தளராது தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்தார். தனது ஆழமான அத்திவாரத்தையோ அல்லது குடும்ப விழுமியத்தையோ அலட்சியம் செய்யாது ஒரு தந்தைக்கும், பிள்ளைக்கும் இடையிலான அதே உறவுமுறையை தனது ஊழியர்கள் மத்தியிலும் பேணியவாறு செயற்பட்டார். அவரது மரபுச் சிறப்பும், தொலைநோக்கும் சோதனைமிக்க காலகட்டங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சமய நிகழ்வுகள், கல்வி மற்றும் சமூகத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு கணிசமான பங்களிப்புக்களை வழங்கி எண்ணற்ற மக்களின் வாழ்வுகள் சிறக்க வழிகோலியுள்ளன. பல்வேறு தனித்துவமான சிறப்பம்சங்களினால் SLIM வர்த்தகநாம மேன்மை விருது, தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஏற்றுமதி விருதுகள் மற்றும் இலங்கை தேசிய தொழிற்துறைகள் சம்மேளனத்தின் தொழிற்துறை மேன்மை விருது போன்ற பல விருதுகளையும், சாதனைகளையும் குழுமம் பெற்றுள்ளது. சிறுவயதில் தனது பெற்றோரை இழந்த இளைஞன் ஒருவன் தனது பாட்டியாரின் ஆசீர்வாதத்துடன் தொழில்தேடி கொழும்பிற்கு வந்து இன்று DSI சாம்சன் குழுமம் என்ற பாரிய வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியமை நாமெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. எமது எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் வானமே எல்லையாகக் காணப்படுவதுடன், தற்போது உள்ள துணை நிறுவனங்களின் துணையுடன் மேலும் பற்பல வியாபாரத்துறைகளில் காலடியெடுத்து வைத்து மென்மேலும் வளர்ச்சி காணும் பயணத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றது.

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)