நிபந்தனைகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » விதிமுறைகள்

DSI சாம்சன் குழுமத்தின் (DSI) இணையத்தளத்திற்குள் நுழையும் போதும், உபயோகிக்கும் போதும் நீங்கள் பின்வரும் நிபந்த​னைகளையும், விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.

  1. DSI இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் துல்லியத்தன்மையை உறுதிசெய்வதற்கு போதிய கவனம் செலுத்தப்பட்டிருப்பினும், குறிப்பாக கூறப்படாத பட்சத்தில் இந்த இணையத்தளத்திலுள்ள தகவல்கள் எவ்விதமான பிரதிநிதித்துவத்தையோ அல்லது உத்தரவாதத்தையோ கொண்டிராததுடன், கிடைக்கப்பெறுகின்ற தகவல்களை உபயோகிப்பது தொடர்பில் DSI நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பேற்றுக்கொள்ளாது. மேலும் DSI இணையத்தளம் கிடைக்கப்பெறுகின்ற இணையத்தளங்கள் அல்லது சேர்வர்கள் வைரஸ்கள் அல்லது வேறு ஏதாவது ஆபத்தான கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும் DSI எவ்விதமான உத்தரவாதத்தையும் வழங்காது.
  2. இந்த இணையத்தளத்தில் உள்ள தகவல்களில் ஏதாவது மாற்றங்களையோ அல்லது புதுப்பித்தல்களையோ எவ்விதமான முன்னறிவித்தல்களுமின்றி மேற்கொள்ளும் உரிமையை DSI கொண்டுள்ளது.
  3. DSI இணையத்தளம் ஏனைய இணையத்தளங்களுடன் இணைப்புக்களை ஏற்படுத்த இடமுண்டு. அவை DSI இன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையல்ல. அத்தகைய இணையத்தளங்களில் இடம்பெற்றுள்ள உள்ளடங்கங்களுக்கு DSI எவ்விதத்திலும் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டாது. சௌகரியத்தை முன்னிட்டு மட்டுமே அத்தகைய இணையத்தளங்களுடனான இணைப்புக்களை DSI வழங்குவதுடன், அத்தகைய இணையத்தளங்களுடனான இணைப்பானது அத்தளங்களிலுள்ள உள்ளடக்கங்களை DSI அங்கீகரிப்பதாக கருதப்படமுடியாது.
  4. DSI இணையத்தளத்திலுள்ள தகவல்கள், தகவல் நோக்கங்களுக்காக மட்டும் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது உபயோகிக்கப்படவோ, நகலாக்கம் செய்யப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ முடியம். எனினும் இப்பக்கத்தின் அடிப்பாகத்திலுள்ள காப்புரிமை சின்னங்கள் மற்றும் அறிவித்தல்களுக்கு உட்படுவதாக அவை அமைதல் வேண்டும்.
  5. DSI உற்பத்திகள் தொடர்பான தகவல்கள் இந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது கிடைக்கப்பெறாத DSI உற்பத்திகள் மற்றும் சேவைகள் குறித்த விபரங்களையோ அல்லது குறுக்கு விபரங்களையோ இது கொண்டிருக்கலாம். அத்தையக விபரங்கள் அந்த உற்பத்திகளை அல்லது சேவைகளை விற்பனை செய்வதற்கு DSI உத்தேசித்துள்ளதாக கருதப்படல் ஆகாது.
  6. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் சட்டங்களுக்கு உட்பட்டவையாகவே வரையப்படுள்ளதுடன், அவற்றிற்குக் கட்டுப்பட்டவை.