மோலோட்டம்

புத்தாக்கம், ஏற்புத்திறன் மற்றும் பொறுப்புணர்வு, மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் உயர் தொழில்தர்மம் மற்றும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்கள் ஆகிய அனைத்து அம்சங்களின் இணைப்புடன் 52 ஆண்டுகளுக்கும் மேலாக DSI சாம்சன் குழுமம் இன்று பெருவிருட்சமாக வளர்ச்சிகண்டு, நாட்டிலுள்ள முன்னணி வர்த்தக கூட்டு நிறுவனமாகவும், இலங்கையில் பாதணி மற்றும் சைக்கிள் டயர்களை உற்பத்திசெய்வதில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது.

மோலோட்டம்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » எமது விபரங்கள் » மோலோட்டம்

எமது நிறுவனம் இன்று 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற வருடாந்த விற்பனைத் தொகையையும் கடந்து, பாதணிகள் மற்றும் சைக்கிள் டயர்களை உற்பத்தி செய்வதில் நாட்டில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. உலகில் 40 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொள்வதுடன், Reebok, Fila, Clarks, Puma, Dell மற்றும் Avira போன்ற சர்வதேச வர்த்தகநாமங்களை உள்நாட்டில் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. உலகில் நன்மதிப்புப் பெற்றுள்ள வர்த்தகநாமங்களுக்கு ஈடாக, உயர் தரத்திலான பாதணிகளை உற்பத்தி செய்யும் தெற்காசிய உற்பத்தி நிறுவனம் என்ற பெருமைக்கு நேர்த்தியான ஒரு உதாரணமாகவும் நிறுவனம் திகழ்ந்துவருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு உற்பத்திகளை வெற்றிகரமாக விநியோகிப்பதற்கு ஏதுவாக 22 துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டில் 200 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் 5,000 முகவர்கள் மூலமாகவும் எமது உற்பத்திகளை விநியோகித்து வருவதுடன், இலங்கையிலுள்ள குடும்ப உரிமையாண்மையின் கீழான மிகப் பாரிய கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்துவருகின்றோம்.

ஒரு பொறுப்புணர்வுமிக்க வர்த்தக நிறுவனம் என்ற வகையில் எமது சமூகத்தை வலுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்கிவருகின்றோம். நாடெங்கிலும் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்திட்டங்கள் எமது சமூகத்தின் நலனை மேம்படுத்துவதில் எமது முயற்சிகளையும், ஒரு பொறுப்புள்ள வர்த்தக நிறுவனமாகத் திகழவேண்டும் என்பதில் எமது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டையும் வெளிக்காண்பிக்கின்றன.

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)