தொழில்வாய்ப்புக்கள்

திறமைகள், வளர்ச்சி மற்றும் கூட்டுமுயற்சி ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் உள்ளார்ந்த கலாச்சாரமொன்றை DSI சாம்சன் குழுமம் கொண்டுள்ளது. நீங்கள் ஆற்றும் பணி எமது வியாபாரம் மற்றும் சமூகத்தின் மீது நேரடி தாக்கத்தை விளைவிக்கின்றது.

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » தொழில்வாய்ப்புக்கள்

சான்றுகள்

பெயர்: சுசந்த எம் விதானகே

நிறுவனம் : டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

நிறுவனத்தில் பணியாற்றும் காலப்பகுத: 30 வருடங்கள்

பதவி நில: பிரதிப் பொது முகாமையாளர்

தகைமை மற்றும் தொழிற்துறை அனுபவ காலம்:
கொழும்பு பல்கலைக்கழகத்தில் EDBA தகைமையைக் கொண்டுள்ள இவர் தகவல் தொழில்நுட்பத்துறையில் 30 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளார். முகாமைத்துவப் பயிற்சியாளராக இணைந்துகொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து தகவல் தொழில்நுட்ப முகாமையாளராகப் பணியாற்றிவருகின்றார். IFS என்ற தொழிற்துறை வளத்திட்டமிடல் தொகுதியை முகாமைத்துவம் செய்வதில் 15 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள இவர் டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின் பிரதிப் பொது முகாமையாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். 2007 இல் ஐப்பானில் நடாத்தப்பட்ட Business Innovation by Information Technology (BIIT) கற்கைநெறி நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்திசெய்ய வாய்ப்புக் கிட்டியமை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

குடும்ப விபரம: எனது மனைவி ரேணுகா ஒரு ஆங்கில ஆசிரியையாகக் கடமையாற்றி வருவதுடன், எனது புதல்வர்கள் இருவரும் காலி மகிந்த கல்லூரியில் தற்போது கல்விகற்று வருகின்றனர். சிரேஷ்ட முகாமைத்துவத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் எனது பணியை முன்னெடுப்பதில் எனது குடும்பத்தின் பக்கபலத்தை நான் போற்றுகின்றேன். அதேசமயம் நாங்கள் இந்தளவிற்கு உயர்ச்சி காண்பதற்கு டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் வழங்கியுள்ள உதவிகளுக்கு எனது குடும்பம் நன்றிக்கடன்பட்டுள்ளது.

நிறுவனம் தொடர்பான அவரது உணர்வுகள்:

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டில் நான் சேவையாற்றியுள்ள 30 வருட காலத்தில், அதாவது நிறுவனத்தின் வரலாற்றில் கிட்டத்தட்ட 60% வரையான காலத்தில் நிறுவனம் அடிமட்டத்திலிருந்து பெருவிருட்சமாக வளர்ச்சி கண்டுள்ள பயணத்தில் நிகழ்ந்துள்ள அனேகமான அபிவிருத்திகளை நான் கண்ணூடாகக் கண்டுள்ளேன். இந்த அளவிற்கு வளர்ச்சிகண்டுள்ள நிறுவனத்தின் பயணத்தில் சிறப்பான மற்றும் கஷ்டமான காலகட்டங்களில் எனது உச்ச பங்களிப்பை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

இத்தகைய அணியைக் கொண்டுள்ளமை எனக்கு கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டமாக நான் கருதுவதுடன், அனைத்து மட்டங்களையும் சார்ந்த அனைத்து அணி உறுப்பினர்களும் வழங்கிவரும் ஆதரவு போற்றத்தக்கத்து.

உள்நாட்டிலிருந்து சர்வதேச அளவில் வியாபித்து உலகில் புகழ்பெற்ற ஒரு வர்த்தகநாமமாக DSI இனை பிரகாசிக்கச் செய்யவேண்டும் என்ற நிறுவனத்தின் இலட்சியத்தை அடைந்துகொள்வதற்கு என்னாலான முழு பங்களிப்பையும் வழங்குவதை எதிர்பார்த்துள்ளேன். பல்வேறுபட்ட நவநாகரிகங்களை ஈடுசெய்யும் வகையில் மிகச் சிறந்த தரத்திலான உற்பத்திகளை வடிவமைத்து எனது தாய்நாட்டின் அபிவிருத்திக்கு அன்னிய செலாவணியை ஈட்டுவதற்கு உதவுவேன்.



பெயர்: லக்மால் தர்மரத்ன

நிறுவனம் : டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

நிறுவனத்தில் பணியாற்றும் காலப்பகுத: 7 வருடங்கள்

பதவி நில: பிரதிப் பொது முகாமையாளர்

தகைமை மற்றும் தொழிற்துறை அனுபவ காலம்:
BBA (விசேடம்)/ஐக்கிய இராச்சிய முகாமைத்துவக் கணக்கியல் துறையில் உயர் டிப்ளோமா/மனித வளங்கள் முகாமைத்துவத்தில் தேசிய டிப்ளோமா, இலங்கை IPM, 12+ ஆண்டுகள் அனுபவம். இதற்கு முன்னர் சிங்கர் மற்றும் ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றில் முகாமைத்துவ அணியில் ஒருவராகக் கடமையாற்றியுள்ளார்.

குடும்ப விபரம: மனைவி பிரிமாலி மற்றும் டிகான்.

நிறுவனம் தொடர்பான அவரது உணர்வுகள்:

DSI குழுமத்தின் உறுப்பினராக இருப்பதையிட்டு நிச்சயமாகப் பெருமைப்படுகின்றேன். இங்கே மகத்தான கூட்டுறவும், சிறந்த தொழிற்பயணத்திற்கான சூழலும் காணப்படுகின்றமை தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஸ்தாபக பணிப்பாளர் சபைத் தலைவர் மீது கொண்டுள்ள விசுவாசமும், நிறுவனத்தின் கோட்பாடுகளும் உண்மையான இலங்கை நிறுவனத்தின் வியக்கவைக்கும் தனித்துவ சிறப்பாகும்

பொது இலக்குகளை அடைந்துகொள்வதில் ஒற்றுமைமிக்க பணியாளர்களைக் கொண்டுள்ள அணி ஒன்றிணைந்து செயற்பட்டுவருகின்றது.

இந்த நிறுவனத்தில் இன்னும் நீண்ட காலம் பணியாற்றவேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன்.

ஸ்தாபக பணிப்பாளர் சபையின் தலைவரின் வழிகாட்டலின் கீழ் DSI குழுமம் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பாரிய பங்களிப்பாற்றி வருகின்றது. ஆண்டு முழுவதும் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் ஆதரவுடன் கலாச்சார நிகழ்வுகளை ஊழியர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

பெயர்: சுதர்ஷன விக்கிரமாராச்சி

நிறுவனம் : டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்/சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

நிறுவனத்தில் பணியாற்றும் காலப்பகுத: 2 வருடங்கள்

பதவி நில: மனித வளங்கள் மற்றும் நிர்வாக முகாமையாளர்

தகைமை மற்றும் தொழிற்துறை அனுபவ காலம்:
இலங்கை IPM இல் ஆளணி முகாமைத்துவத்தில் டிப்ளோமா, ஐக்கிய இராச்சியம் முகாமைத்துவ சேவைகள் நிலையத்தில் தொழிற் கற்கைநெறி டிப்ளோமா, மனிதவளம் மற்றும் நிர்வாகத்துறையில் 23 ஆண்டுகள் தொழிற்துறை அனுபவம். முன்னர் பணியாற்றியுள்ள நிறுவனங்கள் – பிரான்டிக்‌ஸ், ஸ்மார்ட் ஷேர்ட்ஸ், ஜனஷக்தி இன்ஷூரன்ஸ், கிறிஸ்டல் சுவெட்டர்ஸ், ஜூபிலி அப்பரல், கொரியா லங்கா கார்மன்ட்ஸ், நெக்ஸ்ட் மனுபக்சரிங், தங்கொட்டுவ போர்சலின்.

குடும்ப விபரம: மனைவி – டோனா மதுரகாமினி வீரமன் – விசாரணையாளர் – பாதுகாப்பு அமைச்சு. புதல்வன் – இசுறு உத்தல விக்கிரமாராச்சி – கொழும்பு நாலந்த கல்லூரி மாணவன் – 2014 ஆகஸ்ட் க.பொ.த (உ/த).

நிறுவனம் தொடர்பான அவரது உணர்வுகள்:

அதிவிசேடமான வியாபார உத்திகளை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, ஊழியர்கள் மத்தியில் உயர் மட்ட திருப்தியையும், சிறந்த தொழிற்துறை உறவுமுறைகளையும் பேணும் வகையில் அதிவிசேட மனிதவள நடைமுறைகளையும் பின்பற்றுவதால் DSI ஒரு அதிசிறந்த நிறுவனமாகத் திகழ்ந்துவருகின்றது.

சிறந்த அனுபவத்தையும், சிறந்த ஒழுங்கமைப்பையும், சிறந்த விசுவாசத்தையும் கொண்டுள்ள அணி எந்த சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராக உள்ளது.

எவராலும் இலகுவில் நிரப்பப்பட முடியாத முக்கியத்துவம் வாய்ந்த பங்காளர்களுள் ஒருவராக நிறுவனம் என்னைக் கருதவேண்டும் என்பதே எனது விருப்பம்.

நாட்டிற்கு எப்போதும் முதலிடம் கொடுக்கும் DSI இன் சிறப்பை நான் அவதானித்துள்ளதுடன், நிறுவனம் வியாபாரத்திற்கு இரண்டாம் இடத்தையும், நாட்டிற்கு முதலிடம் கொடுத்துள்ள சந்தர்ப்பங்களையும் நான் அவதானித்துள்ளேன். மேலும் தனது ஊழியர்களும் தாய்நாட்டில் அக்கறை கொண்டுள்ள, பொறுப்புணர்வுமிக்க குடிமக்களாகத் திகழுவதையும் DSI ஊக்குவித்து வருகின்றது.