
50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் சுதேசிய தொழிற்துறையின் வளர்ச்சியை டி சாம்சன் இன்டஸ்ரிஸ் ஊக்குவித்து வந்துள்ளது. ஸ்திரத்தன்மையுடனான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு வளங்களை சிறந்த முறையில் ஒதுக்குவதே நிறுவனத்தின் வெற்றியின் இரகசிய மந்திரமாகும்!
ஸ்தாபக பணிப்பாளர் சபைத் தலைவரும் அவரது பிள்ளைகளும் இணைந்து உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பாதணிகளை விற்பனை செய்வதற்காக கொழும்பு, கோட்டையில் டி சாம்சன் அன்ட் சன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தனர்.
தமது வியாபாரத்தின் கணிசமான வெற்றியைத் தொடர்ந்து 16 ஊழியர்களைக் கொண்ட பாதணி உற்பத்தித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வளர்ச்சிகண்டுவந்த சட்ட மற்றும் தொழில் நடைமுறைகளுக்கு இணங்க உற்பத்தி வசதி விரிவுபடுத்தப்பட்டதுடன் டி சாம்சன் இன்டஸ்ரிஸ் லிமிட்டெட் நிறுவப்பட்டது.
சிறந்த உற்பத்தித்திறனை உறுதிப்படுத்தும் முகமாக தொழிற்துறை தர நடைமுறைகளுக்கு இணங்க இறப்பர் கலவை இயந்திரமொன்று பொருத்தப்பட்டது.
DSI வர்த்தகநாமத்தின் முதற்தொகுதி சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புக் கிடைத்தமை அதனை உச்சத்திற்கு கொண்டுசென்றது.
வர்த்தகநாமத்தின் வெற்றியை அடுத்து முதலாவது DSI காட்சியறை கொழும்பின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.
முதலீடுகளின் பயன்களை அறுவடைசெய்யும் முகமாக முதலாவது விரிவாக்க செயற்திட்டமாக சாம்சன் எக்ஸ்போட்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
மூலப்பொருட்கள் மற்றும் உரிய பாகங்கள் மற்றும் சாதனங்களை நேரடியாக இறக்குமதிசெய்யும் பொருட்டு சாம்சன் டிரேடிங் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது.
"Ranpa" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் பாதணி உற்பத்தியை ஆரம்பிக்கும் நோக்குடன் சாம்சன் மனுபக்சரிங் லிமிட்டெட் என்ற பெயரில் இரண்டாவது சப்பாத்துத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ச்சியான மேம்பாடு என்ற கொள்கைக்கு உயிரூட்டும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து வார்ப்புக்கள், மூலப்பொருள் வெட்டிகள் மற்றும் ஏனைய பாகங்களை உற்பத்தி செய்வதற்காக சாம்சன் இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபிக்கப்பட்டது.
2 ஆவது விரிவாக்க செயற்திட்டமாக DSI வர்த்தகநாமத்தின் கீழ் துவிச்சக்கரவண்டிகளுக்கான டயர்கள் மற்றும் ரியூப்களை உற்பத்திசெய்யும் நோக்கில் சாம்சன் றப்பர் இன்டஸ்ரிஸ் லிமிட்டெட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
DSI பாதணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி கொண்டாடப்பட்டது.
சாம்சன் இன்டர்நஷனல் ஒரு பொது நிறுவனமாகக் கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது.
தேசிய கலைஞர்களை வளர்க்கும் முகமாக சித்துவிலி என்ற ஓவியப்போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
மற்றுமொரு விரிவாக்க முயற்சியின் கீழ் கயிறு உற்பத்தித் துறையில் கால்பதித்து, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு Samtessi தூரிகை உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டது.
வார்க்கப்பட்ட இறப்பர் உற்பத்திகளை ஏற்றுமதிசெய்யும் முகமாக சாம்சன் றப்பர் புரொடக்ட்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது.
டி சாம்சன் அன்ட் சன்ஸ் லிமிட்டெட் வருடத்தின் தொழில்முயற்சியாளர் என்ற மதிப்புமிகு விருதை வென்றது.
பாடசாலை மற்றும் விளையாட்டு உபயோகச் சப்பாத்துக்களை உற்பத்திசெய்யும் முகமாக மூன்றாவது சப்பாத்துத் தொழிற்சாலையான சாம்சன் ஸ்போர்ட்ஸ்வெயார் லிமிட்டெட் ஆரம்பிக்கப்பட்டது.
நெளிவு அட்டைப்பெட்டிகளை உற்பத்திசெய்யும் முகமாக DDP பெக்கேஜிங் ஆரம்பிக்கப்பட்டது.
டி சாம்சன் அன்ட் சன்ஸ் லிமிட்டெட் 100 ஆவது அதி நவீன காட்சியறையை கண்டியில் திறந்துவைத்தது.
மற்றுமொரு விரிவாக்க முயற்சியாக உணவு மற்றும் பானவகைத் தொழிற்துறையில் கால்பதிக்கும் நோக்குடன் களனி வலி கனரிஸ் (கேவிசி) லிமிட்டெட் இணைத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கையிலுள்ள மிகச் சிறந்த மூன்று வர்த்தகநாமங்களுள் ஒன்றாக DSI இலங்கை சந்தைப்படுத்தல் நிலையத்தால் தெரிவுசெய்யப்பட்டது.
DSI பாதணியின் 40 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
மற்றுமொரு விரிவாக்க முயற்சியாக சாம்சன் ரஜரட்ட் டைல்ஸ் களிமண் கூரை ஓட்டு உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்தது.
வெளிநாட்டில் முதலாவது காட்சியறை இந்தியாவின் சென்னையில் திறந்தவைக்கப்பட்டது.
FILA மற்றும் RBK (REEBOK) ஆகியன இலங்கைக்கான தமது அங்கீகரிக்கப்பட்ட மீள்விற்பனையாளராக டி சாம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனத்தை நியமித்தது.
தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உற்பத்திகளை வழங்கும் பொருட்டு சாம்சன் இன்போமேஷன் டெக்னோலொஜிஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
DSI சாம்சன் குழுமம் SDV International Logistics (Pvt) Ltd உடன் கூட்டிணைவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது.
புதுப்பிக்கப்படக்கூடிய மின்சக்தித் துறையில் காலடியெடுத்து வைக்கும் வகையில் 2 மெகா வாற் மின்வலுவை உற்பத்திசெய்யும் ஒரு சிறு நீர்மின் உற்பத்திச் செயற்திட்டமான ஹைட்ரோ டிரஸ்ட் லங்கா ஆரம்பிக்கப்பட்டது.
ஐரோப்பிய சந்தைகளுக்கு துவிச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்வதை விரிவுபடுத்தும் வகையில் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆரம்பிக்கப்பட்டது.
வேர்ஜின் காட்டுப் பிரதேசங்களிலுள்ள வளங்களின் மூலம் இயற்கையாக ஊற்றெடுக்கும் தண்ணீரைப் போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் இலக்குடன் மவுன்ட் ஸ்பிரிங் வோட்டர் (பிரைவேட்) லிமிட்டெட் ஆரம்பிக்கப்பட்டது.
களனி வலி கனரிஸ் (KVC) நிறுவனத்தின் CIC விவசாய வர்த்தகப் பிரிவின் 20 சதவீத பங்குகளை கொள்முதல் செய்த DSI சாம்சன் குறூப் (பிரைவேட்) லிமிட்டெட் அதன் துணைநிறுவனமாக மாறியது.
DSI சாம்சன் குழுமம் கொழும்பு சென்ரல் ஹொஸ்பிட்டல்ஸ் (ஆசிரி சென்ரல்) முதலீடு செய்து அதன் மூலமாக ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் லிமிட்டெட்டுடனான பங்குடமையை ஏற்படுத்திக் கொண்டது.
DSI சாம்சன் குறூப் (பிரைவேட்) லிமிட்டெட்டின் முற்றுமுழுதான ஒரு துணை நிறுவனமாக சாம்சன் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆரம்பிக்கப்பட்டது.
சாம்சன் றப்பர் இன்டஸ்ரிஸ் லிமிட்டெட் நிறுவனம் டயர்கள் மற்றும் ரியூப்களை உற்பத்தி செய்யும் நிலையத்துடன் ரதுபஸ்வல இற்கு விஸ்தரிக்கப்பட்டது.
சிங்கப்பூர் பிட்ச் தரப்படுத்தல் நிறுவனத்தின் கொழும்பு கிளை DSI ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்டின் தரப்படுத்தலை உயர்த்தி 'BBB+(lka)\’ இலிருந்து 'A-(lka) இற்கு தரமுயர்த்தியது.
பெருமதிப்புமிக்க சர்வதேச விருதான “வர்த்தகநாம தலைமைத்துவ விருதை” பெற்றுக்கொண்ட DSI சாம்சன் குழுமத்தின் DSI Super Sport மீண்டும் ஒரு முறை வெற்றிவாகை சூடியது.
DSI சாம்சன் குழுமம் Dell விநியோகத்தராக DELL Global B.V உடன் கைச்சாத்திட்டது.
Samson IT நிறுவனம் (மீள்நாமமிடப்பட்ட Samson Information Technologies (Pvt) Ltd) இலங்கையில் DELL இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தராக மாறியது.
DSI சாம்சன் குழுமம் Avira விநியோகத்தராக ஜேர்மனியின் AVIRA உடன் கைச்சாத்திட்டது.
DSI சாம்சன் குழுமம் Globe Knitting (Pvt) Ltd நிறுவனத்தைக் கொள்முதல் செய்தது.
DSI பாதணியின் 50 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
டி சாம்சன் அன்ட் சன்ஸ் லிமிட்டெட் ஒரு முற்றுமுழுதான விநியோக நிறுவனமாக மீள்கட்டமைப்புச் செய்யப்பட்டது.
DSI சாம்சன் குழுமம் இலங்கையில் Dell லேசர் ஜெட் பிரின்டர்களை ஆரம்பித்தது.
DSI சாம்சன் குழுமம் இலங்கையில் Dell புரொஜெக்டர்களை ஆரம்பித்தது.
DSI மற்றும் சாம்சன் ஸ்போர்ட்ஸ்வெயார் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டன.
அலைகள்(Waves) தொடங்கப்பட்டது.
மூலதன லங்கா (Pvt) Ltd: - DSI முன்னணி நிறுவனம் வாங்கியது.
Thermoform ஆலை - SCOM புதிய ஆலை தொடங்க.
SIL - தொடங்கப்பட்டது சாம்சன் பிவிசி.
சாம்சங் அச்சுப்பொறி விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள உட்கார்ந்து.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)