தொழில்வாய்ப்புக்கள்

We recruit talented people from all academic backgrounds into our career enhancement programmes. All our positions offer an opportunity to learn the myriad of positions in a Corporate Operation.

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » தொழில்வாய்ப்புக்கள்

முகாமைத்துவப் பயிற்சித் திட்டங்கள்

“எதிர்காலத் தலைவர்கள்”, DSI சாம்சன் குழுமம் – முகாமைத்துவ பயிற்சித் திட்டம்

நீங்கள் நடைமுறை யதார்த்தவாதியும், பெறுபேறுகளை இலக்காகவும் கொண்டுள்ள ஒருவரா? நீங்கள் உங்களையே முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளீர்களா? உயர் நன்மதிப்பும், உங்கள் மீது நம்பிக்கைவைத்து உங்களது திறனுக்கு மதிப்பளிக்கும் நிறுவனம் ஒன்றில் சிறந்த பதவி ஒன்றை வகிக்க விரும்புகின்றீர்களா? இவை அனைத்தும் உங்களுக்கு பொருந்தும் எனில் DSI சாம்சன் குழுமத்தின் முகாமைத்துவ பயிற்சி திட்டம் உங்களுக்குரியதே!

சிறந்த கல்வித் தகைமைகளைக் கொண்ட, திறமைமிக்க, நபர்கள் தமது உண்மையான திறன்களை வெளிக்கொணரவும், தொழில்ரீதியாக வெற்றிகரமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்குமுரிய கதவுகளை திறந்துவைத்தும் எமது முகாமைத்துவ பயிற்சித் திட்டம் கடந்த காலங்களில் மிக முக்கியமான ஒரு பாத்திரம் வகித்துள்ளது.

எமது முகாமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது பரந்த மற்றும் பெறுமதிமிக்க அனுபவத்துடன், வியாபாரத்தில் முக்கியமான தொழிற்பாட்டுத் துறைகளில் அனுபவங்களை கற்று, சவால்மிக்க சுழற்சி அடிப்படையிலான பணிகளுடன் பணிபுரியும்போதே முற்றுமுழுதான ஒரு முகாமைத்துவ திறமைகள் பயிற்சியை வழங்குகின்றது. இப்பயிற்சித்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்யும் பட்சத்தில் வழங்கப்படும் தலைப்பு ஒன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் முன்னிலையில் படைப்பாக்கம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரப்படுவார்கள். தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் குழுமத்தில் சவால்மிக்க பதவிநிலைகளுக்கு நியமிக்கப்படுவதுடன், நிரந்தர ஊழியராகவும் உள்வாங்கிக்கொள்ளப்படுவர்.

ஒவ்வொரு ஆண்டிலும் 10 மிகச் சிறந்த நபர்கள் இப்பயிற்சித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், 12 மாத கால பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. நீங்கள் 28 வயதுடையவராகவோ அல்லது அதற்கு கீழ்ப்பட்டவராகவும், குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு பட்டம் ஒன்றைப் பெற்றவராகவும் அல்லது பூரண தொழில்சார் தகைமை ஒன்றைக் கொண்டவராகவும், மேலதிக கல்விச்செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்டவராகவும், தலைமைத்துவ ஆற்றல்களுடன் அணியாகச் செயற்படும் உத்வேகம் கொண்டவராகவும் இருப்பின் தயவுசெய்து உங்களது விண்ணப்பங்களை FutureLeaders@dsi.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

முகாமைத்துவ பயிற்சித்திட்டம் தொடர்பான விபரங்கள் மே மற்றும் ஜுன் ஆகிய மாதங்களில் DSI சாம்சன் குழுமத்தின் இணையத்தளத்திலும், குழுமத்தின் பேஸ்புக் விசிறிகள் பக்கத்திலும், www.topjobs.lk மற்றும் செய்தித்தாள்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நீங்கள் கொண்டுள்ள மட்டற்ற திறன்களை வெளிக்கொணர முன்வருமாறு நாம் உங்களை அழைப்பதுடன், DSI சாம்சன் குழுமத்துடன் இணைந்து உங்களது எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ளுங்கள்!