சித்திரம்

dsi-beyond-Business-Art
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » வியாபாரத்திற்கும் அப்பாலான பணிகள் » சித்திரம்

artDSI சாம்சன் குழுமம் சமூக பொறுப்புணர்வுகள் தொடர்பில் தீவிர அக்கறை கொண்டுள்ளது. எமது சமூகத்தின் வளர்ச்சி மீதான எமது அக்கறையுடனான ஈடுபாடு, வியாபாரத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. இதனை மனதில் நிலைநிறுத்தியவாறு 1992 ஆம் ஆண்டில் "Sithuvili" ஶ்ரீலங்கா (“எண்ணங்கள்”) என்ற பெயரில் அற்புதமான நிகழ்ச்சியொன்றை ஆரம்பித்திருந்தோம். நாடளாவியரீதியிலான சித்திரப்போட்டியாக அமைந்துள்ள இந்த நிகழ்வு இலங்கையிலுள்ள மிகவும் மதிப்புவாய்ந்த சித்திரப்போட்டியாக தற்போது மாறியுள்ளது.

வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என எவ்வித வேறுபாடுகளும் இல்லாது இலங்கையின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள சிறுவர்,சிறுமியர் தமது எண்ணங்கள், பதிவுகள், வெளிப்பார்வைகள் மற்றும் கருத்துக்களை வரைதல் மற்றும் ஓவியம் மூலமாக வெளிப்படுத்தும் வாய்ப்பை இப்போட்டி அவர்களுக்கு வழங்குகின்றது. ​அனேகமானவர்கள் பங்குபற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் இதற்கான நுழைவுகள் அனைத்து வடிவங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பென்சில், வர்ண பென்சில், நிறச்சோக்கு, நீர் வர்ணங்கள், கரி போன்றன.)

முன்னணி வர்த்தகர்கள், கல்விமான்கள் மற்றும் பிரபலமான உள்நாட்டு ஓவியர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்டமான விருது வழங்கல் நிகழ்வு மற்றும் கலாச்சார நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான இனங்காணல் அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், அவர்கள் கல்விபயிலும் பாடசாலைகளின் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு பயன்படும் வகையில் பாடசாலைகளுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவது விருதுகள் நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)