தொழில்வாய்ப்புக்கள்

careers
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » தொழில்வாய்ப்புக்கள்

தொழில் வளர்ச்சி மற்றும் பணியாளர் அபிவிருத்தி

மகத்தான பெறபேறுகளை ஈட்டி, உரிய இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்புக்களை நாம் எமது பணியாளர்களுக்கு வழங்கிவருகின்றோம்., பன்முகப்பட்ட எமது குழுமம் வேறுபட்ட தொழிற்துறைகளில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை முன்னெடுக்கும் ஏராளமான பணியாளர்களை ஒன்றிணைக்கின்றது. அவர்களுடைய தொழில் வாழ்க்கை தொடர்பான கனவுகள் மெய்ப்படுவதற்கு அவர்களை ஊக்குவித்து, உரிய வாய்ப்புக்களை வழங்கவேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மேம்பாட்டு மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வெகுமதி நிகழ்ச்சித்திட்டம் என்பன எமது பணியாளர்கள் மிகச் சிறந்த வழிகாட்டலையும், உரிய இனங்காணல் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வழிகோலும் அதேசமயம், எமது வாடிக்கையாளர்களும் மிகச் சிறந்த உற்பத்திகளையும், சேவைகளையும் எமது குழுமத்திடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர் என்பதையும் நாம் உறுதி செய்கின்றோம்.

பயிற்சி மற்றும் சான்று அங்கீகாரம்

ஒவ்வொரு ஊழியரினதும் உறுதியான அடித்தளமானது பலம்மிக்க பணியாளர் குழுவை விருத்திசெய்ய உதவுகின்றது. DSI இனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், மிகவும் பெறுமதிவாய்ந்த சொத்தாக உள்ள எமது ஊழியர்கள், தமது பணியில் தொழிற்துறையின் தர நடைமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதிசெய்கின்றன.

சான்று அங்கீகாரங்களை வழங்குதல், அவர்களுடைய ஆற்றல்களை விருத்தி செய்தல் மற்றும் தொழிற்பாட்டு நடைமுறைகள் மற்றும் திறமைகள் தொடர்பாக அவர்களுடைய அறிவை மேம்படுத்தல் மூலமாக நாம் முதலீடுகளை மேற்கொள்கின்றோம்.

பெறுபேற்றுத் திறமைகளுக்கான வெகுமதிகள்

தங்களது ஆற்றல்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, தமது திறமைகளையும், ஆற்றலையும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருகின்ற பணியாளர்களுக்கு நாம் தலைவணங்குகின்றோம். அத்தகைய விடாமுயற்சிக்கான பலன் என்ன? இனங்காணல் அங்கீகாரம் மற்றும் ஒப்புகை அல்லது தொழில்நிலை வளர்ச்சி!

மகத்தான மனநிறைவு

DSI சாம்சன் குழுமத்தில் பணியின் போதான பயிற்சி மற்றும் ஏனைய பயிற்சி வாய்ப்புக்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்திலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கும் உறுதிமொழியுடன் சீராக, சம அளவில் பேணப்பட்டுவருகின்றன. இது எமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினரும் தமது இலட்சியங்களை எட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் மனநிறைவை அளிக்கின்றன.