மூலோபாயரீதியிலான முதலீடுகள்

Footwear
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » மூலோபாயரீதியிலான முதலீடுகள்

எமது பிரதான வியாபாரத்துறைகளுக்குப் புறம்பாக அவற்றை மேலும் பல துறைகளுக்கு விஸ்தரிக்கும்பொருட்டு இன்னும் பல செயற்திட்டங்களை நாம் திட்டமிட்டுவருகின்றோம். பாரம்பரியமற்ற உள்நாட்டு விவசாய உற்பத்திகளின் பெறுமதியை அதிகரித்தல், உள்நாட்டில் விளையும் பருவகால விவசாய உற்பத்திகளைப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்தல் அடங்கலாக விவசாயத்துறையில் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள பல செயற்திட்டங்களும் இதில் அடங்கியுள்ளன.

வெலஸ்ஸ இறப்பர் கம்பனி

இயற்கை இறப்பரின் உற்பத்தி குறைந்த அளவில் உள்ளமையாலும், உள்நாட்டில் இதற்கு அதிகரித்த கேள்வி நிலவுவதாலும் தற்சமயம் இயற்கை இறப்பருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த அதிகரித்த கேள்வியைப் பூர்த்திசெய்யும் முகமாக இயற்கை இறப்பரின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை உறுதிசெய்வதற்கு நீண்டகால இலக்குகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது. இத்தேசிய இலக்கினை மனதில் நிலைநிறுத்தியவாறு அரசாங்கம் மற்றும் ஏனைய சர்வதேச நிதிவழங்கல் முகவர் அமைப்புகளுடன் இணைந்து நீண்ட கால செயற்திட்ட அடிப்படையில் பல்வேறு பாரிய உலர்/ஈர இறப்பர் உற்பத்தி நிறுவனங்களுடன் பங்குடமைகளை நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். அபிவிருத்தியடையாத பிரதேசமாகக் கருதப்படுகின்ற மொனராகல மாவட்டத்தில் 7 வருட வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இறப்பர் மரங்கள் நாட்டப்படுவது இதன் கீழான ஒரு திட்டமாகும்.

wellassa-rubber

அரசாங்கம் இதற்காக ஏற்கனவே 33 ஏக்கர்கள் நிலத்தை வழங்கியுள்ளதுடன், அங்கே மாதிரி தாவர விற்பனை நிலையமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ மினரல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

micro-minerals

இறப்பர் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான தரமான ஒட்டு மூலப்பொருளை தங்குதடையின்றி விநியோகிப்பதை உறுதிப்படுத்தும்பொருட்டு றிச்சர்ட் பீரிஸ் எக்ஸ்போட்ஸ் லிமிட்டெட்டுடன் பங்குடமையொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)