சமூகம்

Footwear
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » வியாபாரத்திற்கும் அப்பாலான பணிகள் » சமூகம்

Community40 வருடங்களுக்கும் மேலாக ஒரு வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்துவருகின்ற DSI நிறுவனத்தைப் பொறுத்தவரையில் சமூகம் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்கள் என்பது புதியதொரு விடயமல்ல. இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பம்சங்களை வெளிக்காட்டும் நிகழ்வுகளுக்கு DSI சாம்சன் குழுமமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும் ஆதரவளித்துவந்துள்ளன.

"Raja Maha Weheraka Asiriya" என்று அழைக்கப்படுகின்ற இலங்கையின் புராதன ஆலயங்களின் சிறப்பம்சங்களை வெளிக்காட்டும் கண்காட்சியானது சாம்சன் குழுமம் அணுசரணை வழங்குகின்ற மிகவும் பிரபலமான நிகழ்வுகளுள் ஒன்றாகும். இதன் முதற்கட்டமாக நூறு புராதன ஆலயங்கள் (ரஜ மகா விகாரைகள்) புகைப்படம் பிடிக்கப்பட்டு ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்பம்சங்களும் முழுமதி தினங்களில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. இந்த விளம்பரங்களில் ஆலயம் தொடர்பான விளக்கம், புகைப்படங்கள் மற்றும் வழித்திசைகள் பிரசுரிக்கப்பட்டன. இந்த வகையில் 100 ஆவது ஆலயத்தின் சிறப்பு வெளிக்காண்பிக்கப்பட்ட பின்னர் பிரதான நகரங்களில் 3 தினங்களாக கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்செயற்திட்டத்திற்கு மக்களிடமிருந்து பேராதரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

கொழும்பு நகர மண்டப பகுதியில் இடம்பெற்ற வருடாந்த வெசாக் போட்டிக்கும் DSI சாம்சன் குழுமம் இணை அணுசரணை வழங்கியிருந்தது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு (சூரிய மங்கல்ய) சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையுடன் இணைந்து ஆதரவளிப்பது வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற மற்றுமொரு சமூகச் செயற்திட்டமாகும்.

சுனாமி மீள் வீடமைப்பு செயற்திட்டங்கள், சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், உப-ஒப்பந்த வேலைத்திட்டங்கள், காலி பிரதேசத்திலுள்ள ஆலயங்களின் பேணல் பராமரிப்பு மற்றும் வசதிகள் குறைந்த பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கு உதவுதல் ஆகியனவும் குழுமத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)