அனர்த்த உதவி

Footwear
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » வியாபாரத்திற்கும் அப்பாலான பணிகள் » அனர்த்த உதவி

Disaster AidDisaster Aidவெள்ளப்பெருக்கு, வரட்சி மற்றும் கொடிய சுனாமி போன்ற இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் சாம்சன் குழுமமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும் முன்னின்று செயற்பட்டுவந்துள்ளன.

மழைகாலத்தில் வழமையாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கின் போதும், நாட்டின் சில பாகங்களிலுள்ள உலர் வலயங்கள் வரட்சியின் பாதிப்பிற்கு உள்ளாகும் போதும் நிறுவனமும், அதன் தனிப்பட்ட துணை நிறுவனங்களின் நலன்புரிச் சங்கங்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கு எப்போதும் முன்வந்துள்ளன.

2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காலி நகரை மீளக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளர்களின் உதவியுடன் கணிசமான நிதியுதவியை நிறுவனம் வழங்கியிருந்தது. குறிப்பிட்ட சில தினங்களுக்குள் பழ மற்றும் மீன் சந்தைகளின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட வியாபார உரிமையாளாகள் பலர் தமது தொழிற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவியாக அவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)