
இலங்கையிலுள்ள சமூகப்பொறுப்புணர்வுமிக்க ஒரு நிறுவனம் என்ற வகையில் கரப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டம் போன்ற உள்நாட்டு விளையாட்டுக்களுக்கு உதவுவதில் DSI சாம்சன் குழுமம் தீவிர அக்கறை செலுத்திவருகின்றது.
DSI சுப்பர்ஸ்போர்ட் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் பங்குபற்றும் வகையில் இலங்கையில் இடம்பெறுகின்ற ஒரேயொரு கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியாகத் திகழ்கின்றது. மதிப்புவாய்ந்த இச்சுற்றுப்போட்டியில் வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் கலந்துகொள்கின்றன.
DSI சாம்சன் குழுமம் இலங்கை தேசிய பெண்கள் கரப்பந்தாட்ட அணியின் பெருமைமிக்க அணுசரணையாளராகவும், ஆசிய பெண்கள் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளுக்கான இணை அணுசரணையாளராகவும் திகழ்கின்றது.
கரப்பந்தாட்டத்திற்குப் புறம்பாக அதன் துணை நிறுவனங்கள் தடகள விளையாட்டு, பட்மின்டன் மற்றும் கூடைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் தனிநபர்களுக்கும், அணிகளுக்கும் அணுசரணை வழங்கியுள்ளன.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)