
DSI சாம்சன் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் குறிப்பாக அணுசரணைகள் மூலமாக இலங்கையில் கல்வித்துறையுடன் எப்போதும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளது.
“அறிவும், அதிர்ஷ்டமும்” (Danumai Wasanaawai) என்ற DSI சூப்பர் விளையாட்டு பாடசாலை மாணவர்களுக்கான பிரபலமான ஒரு வினாவிடைப் போட்டியாகும். வருடம் முழுவதும் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் கிட்டத்தட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கலந்துகொள்கின்றன. இந்த போட்டியின் தரத்தை இலங்கை கல்வியமைச்சு மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருகின்றது. போட்டியாளர்களுக்குப் புறம்பாக இப்பாடசாலைகளிலுள்ள ஏனைய மாணவர்களும் இதில் பங்குகொள்வதில் விசேட ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சி முழுவதும் பிரபலமான உள்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றினூடாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
DSI இன் அணுசரணையுடன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘கணித ஒலிம்பியாட்’ என்ற வினாவிடைப்போட்டி கொழும்பு பல்கலைக்கழக கணிதவியல்பீடத்தின் உதவியுடன் வருடத்திற்கு ஒரு முறை இடம்பெற்றுவருகின்றது. கணிதவியல் அறிவை மேம்படுத்தி, இலங்கை மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவேண்டும் என்பதே இவ்வினாவிடைப் போட்டியின் நோக்கமாகும். இப்போட்டியின் இறுதி வெற்றியாளர்கள் வருடாந்தம் இடம்பெறுகின்ற சர்வதேச கணிதவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றனர்.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)