குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » ஆடையணி » குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்

காலுறைகளை உற்பத்திசெய்து சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் முகமாக வெளிநாட்டுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட பொறுப்புடமை கொண்ட நிறுவனமாக 1991 ஆம் ஆண்டில் குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபிக்கப்பட்டது. ஆடைத் தொழிற்துறை உலகமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு. மான்பிரெட் குரோல் அவர்கள் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் அங்கீகாரத்தின் கீழ் குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தை நிறுவியிருந்தார். சர்வதேச கப்பற் போக்குவரத்து மார்க்கங்களை இலகுவாக அடைந்துகொள்ளும் வசதியைக் கொண்டிருந்த இந்நிறுவனம் தெற்காசியாவில் தனது அமைவிட அனுகூலத்தை சிறந்த முறையில் உபயோகிக்கின்றது. ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு பெறுமதி சேர் அம்சங்களுடன் பின்னப்பட்ட இறுக்கமான காற்சட்டைகள், முழங்கால் வரை அணியும் புறக் குப்பாயங்கள் (leggings) மற்றும் போர்வைகள் (warmers) அடங்கலாக தனது உற்பத்தி வரிசையை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. குளோப் நைட்டிங் நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் DSI சாம்சன் குழுமத்துடன் இணைந்து கொண்டது.

இத்தொழிற்சாலைக்கு SA8000:2008 தரச்சான்று விருதும், Oeko Tex (உற்பத்தித் தர வகுப்பு 1) போன்ற தரச்சான்று விருதும் கிடைக்கப்பெற்றுள்ளன. Naturaline production (BioRe) இன் உற்பத்தி நடைமுறைத் தேவைப்பாடுகளையும் நிறுவனம் பேணிவருகின்றது. உயர்ந்த மட்டத்திலான நெகிழ்திறனும், நடைமுறைகளை மையமாகக் கொண்ட உற்பத்தி படிநிலைகளும், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, ஊக்கம் கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் இணைப்பும் உயர் தர வடிவமைப்பு ஆற்றல், உற்பத்தித் தரம் மற்றும் குறித்த நேர காலத்திலான விநியோகம் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

இரட்டை மற்றும் ஒற்றை சிலின்டர் இயந்திரங்களை உபயோகித்து காலுறைகள் மற்றும் இறுக்கமான காற்சட்டைகள் போன்ற உள்ளாடை உற்பத்திகளை தயாரித்து வருகின்ற குளோப் நைட்டிங் நிறுவனம், தற்போது வருடம் ஒன்றுக்கு 6.5 மில்லியன் ஜோடிகள் என்ற உற்பத்தி அளவைக் கொண்டுள்ளது. தேசிய தொழிலாளர் சட்டங்கள், சர்வதேச தொழிலாளர் பேரவையால் வரையறுக்கப்பட்டுள்ள சர்வதேச வழிகாட்டல் நடைமுறைகள் மற்றும் பல்வேறுபட்ட ஏனைய ஒழுக்காற்று விதிமுறைகளை நிறுவனம் பூரணமாக பின்பற்றி வருகின்றது. நிறுவனத்தின் உயர் மட்டத்திலான தரத்திற்குப் புறம்பாக ஜேர்மனி, சுவிட்சலாந்து, டென்மார்க், நோர்வே, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, கனடா மற்றும் டுபாய் போன்ற நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் குறித்த நேர கால விநியோகத்தைப் பாராட்டியுள்ளனர். USF Liechtenstein, Podojil Switzerland, DSI Samson group, COOP Denmark, Next Sourcing மற்றும் Richter Canada ஆகிய நிறுவனங்கள் எமது முக்கிய கொள்வனவாளர்களாகக் காணப்படுகின்றனர்.

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

காலுறைகள், இறுக்கமான காற்சட்டைகள்

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

-
-

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்
த.பெ. எண்., 1,
கடவல,
11264, துனாகஹ,
இலங்கை.

தொலைபேச: +94 (0)31 2246167
தொலைநகல்: +94 (0)31 2246120
மின்னஞ்சல்: info@globeknitting.com
இணையத்தளம்: www.globeknitting.com