ஆடையணி

ஆடையணி
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » ஆடையணி

DSI சாம்சன் குழுமத்தின் ஆடையணி உற்பத்தித்துறை அங்கமான சாம்சன் (எக்ஸ்போர்ட்ஸ்) (பிரைவேட்) லிமிட்டெட் ஆடையணிகளை உற்பத்திசெய்து, தனது ஒட்டுமொத்த உற்பத்தியையும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த முதலாவது நிறுவனமாகும். ஜப்பான் நாட்டுடனான வர்த்தக கூட்டுறவினால் எழுந்த தேவைகளைப் பூர்த்திசெய்யும் முகமாக 1980 களில் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்

குளோப் நைட்டிங் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம், 1991 ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. 350 ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இரட்டை மற்றும் ஒற்றை சிலின்டர் இயந்திரங்களை உபயோகித்து பெறுமதிசேர்வைகளுடன் காலுறைகள் மற்றும் காற்சட்டைகள் போன்ற உள்ளாடை உற்பத்திகளை தயாரித்து வருகின்றது. தற்போது அது வருடம் ஒன்றுக்கு 6 மில்லியன் ஜோடிகள் என்ற உற்பத்தி அளவைக் கொண்டுள்ளது.