மீள்பண்படுத்தப்பட்ட இறப்பர்

மீள்பண்படுத்தப்பட்ட இறப்பர்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » மீள்பண்படுத்தப்பட்ட இறப்பர்

சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதில் DSI சாம்சன் குழுமம் தீவிர கவனம் செலுத்துவதுடன், சூழலுக்கு தீங்கிளைக்காத நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொண்டுவருகின்றது. கைவிடப்பட்ட இறப்பர் துண்டுகள் மற்றும் ஏனைய இறப்பர் கழிவுகளை மீள்சுழற்சி செய்து விரிப்புக்கள், இறப்பர் தடுப்புக்கள் (dock fenders), காவிப்பட்டிகள் (conveyor belts) போன்ற சாதாரணமான ஆனால் அத்தியாவசியமான இறப்பர் உற்பத்திகளை உற்பத்திசெய்யும் நோக்குடன் சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் இறப்பர் கழிவை மாற்றுவதற்கு இரசாயனவியல் வல்கனைஸ் அகற்றல் (devulcanisation) நடைமுறையை உபயோகிக்கின்றது. உள்நாட்டுச் சந்தையில் இந்த உற்பத்திகளின் 75 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை நிறுவனம் விநியோகித்துவருவதுடன், குறிப்பிட்ட வெளிநாட்டுச் சந்தைகளுக்கான தேவைகளையும் பூர்த்திசெய்து வருகின்றது. DSI சாம்சன் குழுமம் மீள்சுழற்சி செய்யப்பட்ட இறப்பர் துண்டுகளை சிறுவர்கள் விளையாடும் தரை மேற்தளங்களில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் காயங்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் இறப்பர் தரை ஓடுகளாக மாற்றியமைத்தல் உட்பட பல மேம்பாட்டுச் செயற்திட்டங்கள், வர்த்தக சமூக நலன்புரி மற்றும் ஏனைய செயற்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட்

சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட்

இலங்கையிலுள்ள ஒரு முன்னணி நிறுவனமான சாம்சன் றீகிளெய்ம் இறப்பர்ஸ் லிமிட்டெட் 1991 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. ஏற்றுமதிச் சந்தை மற்றும் 80% உள்நாட்டுச் சந்தைக்கு சேவையளிக்கும் இந்நிறுவனம் மீள்சுழற்சி செய்யப்பட்ட டயர் துண்டுகளை உபயோகித்து மீள்பண்படுத்தப்பட்ட இறப்பரை உற்பத்திசெய்து வருவதுடன் (ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக 7,500 தொன் என்ற அளவில்), விளையாட்டுத் தளங்களுக்கான இறப்பர் தரையோடுகளையும் தயாரித்து வருகின்றது.