சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » இறப்பர் உற்பத்திகள் » சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

DSI சாம்சன் குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமான சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், 1994 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள ஒரு முன்னணி உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் சேவைகள் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. உயர் தொழில்நுட்ப இயந்திரங்களுடன், முற்றிலும் உபகரணமயப்படுத்தப்பட்ட எமது தொழிற்சாலையில் உயர் திறமை கொண்ட அண்ணளவாக 300 தொழில்நுட்ப பணியாளர்களும், மற்றும் 50 முகாமைத்துவ, சந்தைப்படுத்தல் மற்றும் நிர்வாக பதவி நிலைகளிலுள்ள பணியாளர்களும் கடமையாற்றுகின்றனர். எமது பணியாளர்கள் மீது மேற்கொள்ளும் அதியுச்ச முதலீடு எமது இலக்குகளை அடைந்துகொள்வதற்கான சிறந்த வழி என நாம் நம்புகின்றோம். எமது வாடிக்கையாளர் உறவுமுறை மட்டங்களைப் பேணுவதில் எமது நிறுவனங்களின் வெற்றிக்கு அனைவரினதும் ஒன்றுபட்ட உழைப்பே தனித்துவமான சிறப்பம்சம்.

20 வருட அனுபவத்துடன் வார்ப்பட இறப்பர், EVA, நைலோன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்திகளின் ஏற்றுமதியில் நாமே முன்னோடிகள் என்பதையும் நிரூபித்துள்ளோம். பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புக்களுடன், இறப்பர் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் நிலைபேற்றியலுடனான அபிவிருத்திக்கு சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் தன்னை தயாராக்கியுள்ளது. எமது வெற்றிகரமான சாதனைகளுக்கு அறிவு முகாமைத்துவம், புத்தாக்கம், தொடர்ச்சியான பயிற்சி, உற்பத்தித்திறன் மேம்பாடு, நிதியியல் துறை மற்றும் ISO 9001: 2008 தர முகாமைத்துவ முறைமையை மிகக் கவனமாகப் பின்பற்றுதல் ஆகியவற்றின் பங்களிப்பே மூலகாரணம்.

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

தொழிற்சாலை உபயோக டயர்கள், இறப்பர் கித்தான் பட்டிகள், ஐஸ் ஹொக்கி சீடைகள், காற் சில்லு சக்கரங்கள், ஊன்றுகோல் முனைகள் மற்றும் பூண்கள், டிரக் பட்டிகள், கால்நடைப் பட்டி மூட்டுவாய்கள், ஏற்றுத்தட்டு பட்டிகள், சேற்று தடுப்பு மடிப்புக்கள், டிரக் முட்டுத்தாங்கிகள், படகு உருளைகள், ஒளிர் கைப்பட்டிகள், தையல் இயந்திர உட்செலுத்தல் பாகங்கள், பூச்சாடிகள்-நைலோன், பொலிப்புரொப்பீன், போத்தல்கள்–PE, போத்தல்கள்-PET, நிறப்பூச்சு கொள்கலன்கள்-பொலிப்புரொப்பீன், துவிச்சக்கரவண்டி பாகங்கள்-பொலிப்புரொப்பீன், டயர்கள்-EVA, மிதவை பட்டைகள்-EVA, இறப்பர் விரிப்புக்கள், இறப்பர் அடித்தளங்கள், புகையிரத இறப்பர் பட்டைகள்.

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

பொலிப்புரொப்பீன் பிசின்கள், சாயப்பொருட்கள், உலோக கொக்கிகள் மற்றும் வளையங்கள், டயர்களின் வார்ப்பட உலோக சக்கர சட்டகங்கள், துவிச்சக்கரவண்டிகளுக்கான உலோக பாகங்கள், EVA மூலப்பொருட்கள், இறப்பர் தொழிற்துறை உபயோகத்திற்கான இரசாயனப் பொருட்கள்.

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மனி, சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்லோவாக்கியா, நோர்வே, தென்னாபிரிக்கா, ஜப்பான், இந்தியா, டுபாய்

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்


உதவி முகாமையாளர் – சர்வதேச சந்தைப்படுத்தல்

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
டி சாம்சன் ராஜபக்ச மாவத்தை,
பட்டாடுவ,
காலி,
இலங்கை.

தொலைபேச: +94 (0)91 2245300, +94 (0)91 2223266, +94 (0)77 7815407
தொலைநகல்: +94 (0)91 2223267
மின்னஞ்சல்: info@dsitp.com
இணையத்தளம்: www.samsonrubbers.com