இறப்பர் உற்பத்திகள்

இறப்பர் உற்பத்திகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » இறப்பர் உற்பத்திகள்

வெளிப்படையாகத் தெரிகின்ற குளியலறை விரிப்பு அல்லது வெளிப்படையாகத் தோற்றமளிக்காத ஜாடி மூடி வளையம் என இறப்பர் உற்பத்திகள் எதுவாக இருப்பினும் பல்வேறு தொழிற்துறைகளுக்கு அவை பயன்மிக்கவையாக அமைந்துள்ளதுடன், அன்றாட வாழ்க்கையில் பாரிய அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இயற்கை இறப்பர் மற்றும் PVC மற்றும் EVA உட்செலுத்தல் போன்ற நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்புடன் DSI சாம்சன் குழுமத்தின் துணை நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தர நடைமுறைகளை விஞ்சும் உயர் தர இறப்பர் உற்பத்திகளை தயாரித்து வருகின்றன.

குழுமத்தின் துணை நிறுவனங்களான சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி ஆகியன உயர் தர இறப்பர் பாகங்களையும், குழுமத்தின் பாதணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இறப்பர் செருப்புக்கள், பாதணி உள்ளங்கால் பாகங்கள் மற்றும் பாதணி குதிக்கால் பாகங்கள் போன்ற உற்பத்திகளையும் தயாரித்து வருகின்றது.

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி

இலங்கையிலுள்ள மிகப் பாரிய இறப்பர் உற்பத்தி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் சாம்சன் இன்டர்நஷனல் பீஎல்சி நிறுவனம் உந்து மற்றும் வார்ப்பட இறப்பர் உற்பத்திகளைத் தயாரிப்பதில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. 300 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் ISO 9001:2008 சான்று அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இறப்பர் புரொடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இலங்கையில் வார்ப்பட இறப்பர் உற்பத்திகளில் முன்னோடியாகவும், சந்தையில் முதல் ஸ்தானம் வகிக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வார்ப்பட இறப்பர், EVA, நைலோன், பொலித்தீன் (PE), பொலிப்புரொப்பலீன் (PE) மற்றும் இறப்பர் பிணைப்பு தயாரிப்புக்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.