தூரிகைகள்

தூரிகைகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » தூரிகைகள்

எமது துணை நிறுவனமான சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பெல்ஜியம் நாட்டின் M/S. Essef நிறுவனத்துடனான ஒரு கூட்டு வியாபார அங்கமாகும். இலங்கையில் ஒரு முன்னணி தூரிகை மற்றும் துடைப்ப உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கின்ற சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் தனது தொடக்க நிலை, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், எமது உற்பத்திகளின் தரம் மற்றும் திறனையும் உறுதிசெய்கின்றது. எமது புத்தாக்கத்திறன் கொண்ட மற்றும் நவீன பணி நடைமுறைகள் இலங்கையில் பொலிப்புரொப்பலீன் நார்களின் ஏகபோக உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு அமைவாக இறப்பர், மரம் மற்றும் விலங்குகளின் முடி மற்றும் கொக்கோ, பனை மற்றும் பொலிப்புரொப்பலீன் நார் போன்ற அதிசிறந்த மூலப்பொருட்களை உபயோகித்து எமது தூரிகைகளும், துடைப்பங்களும் தயாரிக்கப்படுகின்றன. நீடித்த உழைப்பையும், உயர் தொழிற்துறை நடைமுறைகளையும் உறுதிப்படுத்தும் விசேட நவீன உற்பத்தி வெட்டல் இயந்திரங்களையும் நாம் உபயோகிக்கின்றோம்.

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்தேசி பிரஷ் மனுபக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உறுதியான வெளிநாட்டு பிணைப்புக்களைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமான சாமதேசி தூரிகை தொழிற்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. வன காப்பாளர் மன்றத்தின் (Forest Stewardship Council) சான்று அங்கீகாரத்தைக் கொண்டுள்ள நிறுவனம் வன காப்பாளர் மன்றத்தின் சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இறப்பர் தோட்டங்களினால் நிர்வகிக்கப்படுகின்ற உயர் தரம் கொண்ட மரம் மற்றும் நவீன இயந்திரங்களை உபயோகித்து உயர் தரத்திலான தூரிகைகள் மற்றும் துடைப்பங்களை தயாரித்து வருகின்றது. வேறுபட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமைவாக விசேடமாக வடிவமைக்கப்பட்ட உற்பத்திகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.