
இலங்கையில் மின்னுற்பத்தி தொடர்பில் கேள்விக்கும், விநியோகத்திற்கும் இடையில் அதிகரித்துச் செல்கின்ற இடைவெளியை நிரப்பவேண்டிய அவசர தேவையை உணர்ந்து DSI சாம்சன் குழுமம், புதுப்பிக்கத்தக்க மின்வலு மூலமாக உள்ள நீர்மின்வலு உற்பத்தி மூலமாக அரசாங்கத்துடன் இணைந்து தேசிய மின்விநியோகத்திற்கு மின்வலுவை விநியோகித்து வருகின்றது. நாம் தற்போது ஹைட்ரோ ட்ரஸ்ட் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் வேரப்பிட்டிய ஹைட்ரோ பவர் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய இரு சிறு நீர்மின்வலு உற்பத்தி நிலைய செயற்திட்டங்கள் மூலமாக 4 மொகாவற் மற்றும் 2 மெகாவற் மின்வலுவை விநியோகித்து வருகின்றோம்.
சுற்றுச்சூழல் தொடர்பான கரிசனங்களுக்கு தீர்வுகாணும் வகையில் மிகச் சிறந்த மின்வலு உற்பத்தி நடைமுறைகளை அறிமுகம் செய்வதில் பூரண ஈடுபாட்டுடன் உள்ள DSI சாம்சன் குழுமம் எதிர்காலத்தில் நீர் மின்வலு உற்பத்தித்துறையில் இன்னும் அதிகமான மூலோபாய முதலீடுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட பொறுப்புடமை நிறுவனமான வேரப்பிட்டிய ஹைட்ரோ பவர் (பிரைவேட்) லிமிட்டெட், 2 மெகாவற் என்ற அளவு மின்வலுவை உற்பத்தி செய்து இலங்கையின் தேசிய மின்விநியோகத்திற்கு வழங்கிவருகின்றது.
வரையறுக்கப்பட்ட பொறுப்புடமை நிறுவனமான ஹைட்ரோ ட்ரஸ்ட் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட், 2 மெகாவற் என்ற அளவு மின்வலுவை உற்பத்தி செய்து இலங்கையின் தேசிய மின்விநியோகத்திற்கு வழங்கிவருகின்றது.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)