சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » இறப்பர் கூட்டுப்பொருள் » சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உங்களுடைய கூட்டுப்பொருள் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியை சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் உங்களுக்கு வழங்குகின்றது. தொழிற்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள சிறந்த அறிவும், உயர் தொழில்நுட்ப ஆற்றலும் கொண்ட எமது அணியும், சிறந்த உபகரண வசதியைக் கொண்டுள்ள ஆய்வுகூடமும் மிகச் சிறந்த தரத்திலான சேவையை வழங்க எமக்கு இடமளித்துள்ளன.

DNV இடமிருந்து ISO 9001:2008 சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்நிறுவனம் நாளாந்தம் 35 மெட்ரிக்தொன் அளவுடைய கூட்டுப்பொருளை கலவை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் வருடாந்தம் 800,000 EVA தாள்கள் மற்றும் 600,000 மைக்ரோ செலூலர் இறப்பர் தாள்கள், 11.5 மில்லியன் சோடி செருப்புக்களுக்கான PVC பட்டிகள், 648,000 சோடி PVC பாதணி உள்ளங்கால் பாகங்கள் மற்றும் 600,000 சோடி இறப்பர் பட்டிகளை உற்பத்தி செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

இன்று சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் வாடிக்கையாளர்கள் கோருகின்ற தயாரிப்பையோ அல்லது உயர் தகைமையும், சிறந்த அனுபவத்தையும் கொண்ட எமது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அணி வடிவமைக்கும் தயாரிப்பு முறையிலோ, சிறந்த உபகரண வசதிகளைக் கொண்ட ஆய்வுகூடத்தின் துணையுடன் வடிவமைப்புச் செய்துவருவதுடன், இதற்குத் தேவையான இரசாயனப் பொருட்களை நிறுவனம் வாடிக்கையாளருக்கு வழங்கிவருகின்றது. இறப்பர், PVC மற்றும் EVA என மூன்றிற்கும் வெவ்வேறான உற்பத்தி இயந்திரங்களை நிறுவனம் கொண்டுள்ளதுடன், இங்குள்ள நவீன உபகரணங்கள் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த உற்பத்தி நிலையங்களுள் ஒன்றாகவும் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வதற்கு எமது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அணி தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுத்துவருவதுடன், உற்பத்தி நடைமுறையைக் கண்காணிப்பதற்கு முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்துறை வளத்திட்டமிடல் முறைமையை நிறுவனம் உபயோகிக்கின்றது.

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

NR/SBR/CR/BR/IIR/EPDM/EVA/LDPE ஆகியவற்றினால் ஆக்கப்பட்ட கூட்டுப்பொருட்கள், மைக்ரோ செலூலர் இறப்பர் தாள்கள், EVA பாதணி உள்ளங்கால் பாகங்கள் மற்றும் பாதணி உள்ளங்கால் தாள்கள், கரைத் தாள்கள், இறப்பர் பூட்ஸ் காலணிகள்

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

செயற்கை இறப்பர் மற்றும் முடுக்கிகள், ஒட்சிசனேற்றிகள், ஓசோனேற்றிகள், ஊதல் ஊட்டிகள் போன்ற இறப்பர் இரசாயனப் பொருட்கள்

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

டுபாய், பிஜி தீவுகள்

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. யு. எல். டி.. அமரபால
பணிப்பாளர்

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
பட்டாடுவ
காலி
இலஙகை

தொலைபேச: +94 (0)91 2234597 - 9 , +94 (0)91 4385613 - 5
தொலைநகல்: +94 (0)91 4385973
மின்னஞ்சல்: info@samsoncompounds.com
இணையத்தளம்: www.dsi.lk