இறப்பர் கூட்டுப்பொருள்

இறப்பர் கூட்டுப்பொருள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » இறப்பர் கூட்டுப்பொருள்

எமது இறப்பர் கூட்டுப்பொருள் தளங்கள் தொழிற்துறையில் சில அதி நவீன உற்பத்தி இயந்திரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. குழுமத்தின் உள்ளகத் தேவைகளுக்கு இறப்பர் கூட்டுப்பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்து எமது தொழிற்பாடுகளை ஆரம்பித்த நாம், தற்போது குழுமத்தைச் சாராத வெளிப்புறத்திலுள்ள முக்கிய நிறுவனங்களுக்கும் இந்த உற்பத்திகளை வழங்கிவருகின்றோம்.

எமது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவானது சர்வதேச சந்தையில் எமக்கு போட்டித்திறன் அனுகூலத்தை வழங்கும் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குகின்ற புதிய கலவைகளையும், கூட்டுப்பொருட்களையும் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்துவருகின்றது. எமது துணை நிறுவனங்களான சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் றப்கோ இன்டர்நஷனல் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகியன இறப்பர் கூட்டுப்பொருள் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்றன. சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ISO 9001:2000 சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன் உற்பத்தி நடைமுறையை கண்காணிப்பதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முற்றுமுழுதான தொழிற்துறை வளத்திட்டமிடல் முறைமையை உபயோகிக்கின்றது.

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட சாம்சன் கொம்பவுண்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ப சான்று அங்கீகாரத்தைப்பெற்றுள்ளதிடன், வருடாந்தம் 480,000 EVA மற்றும் 430,000 மைக்ரோ செலூலர் இறப்பர் தாள்களை உற்பத்திசெய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நிறுவனம் தகைமை பெற்ற, சிறந்த அனுபவத்தைக் கொண்ட தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அணியைக் கொண்டுள்ளதுடன், சிறந்த உபகரண வசதியைக் கொண்ட ஆய்வுகூடத்தையும், NR மற்றும் EVA ஆகியவற்றிற்கான இரு வேறான கலவை இயந்திரத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.