செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » December 2022

DSI சாம்சன் குழுமம் தனது 60வது ஆண்டு விழாவை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

வெளியிட்ட நாள் 20 December, 2022


இடையறாது எல்லைகளுக்கு அப்பால் முன்னோக்கிப் பயணிக்கும் தேசிய வர்த்த க நாமம் என்ற ரீதியில் இம்மகிழ்ச்சிகரமான தருணத்தில் பல்லாண்டு காலம் எமக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய எமது வர்த்தகப் பங்காளிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பங்குதாரர்கள் அனைவர்களுக்கும் DSI குழுமம் அதன் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

60வது ஆண்டின் துவக்கமானது, உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் முன்னோக்கிய மற்றும் பின்தங்கிய ஒருங்கிணைப்புகளுக்கு வழி வகுக்கும் கூட்டு முயற்சிகளுடன் தொடங்கப்படுகின்றது.


ஆண்டுவிழாவின் அடையாளச் சின்னத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் விரிவுபடுத்தும் நோக்கில் DSI குழும நிறுவனம் இம்முறை “எல்லைகளுக்கு அப்பால் வேரூன்றியது” என்ற சொற்றொடர் முழக்கத்தை முன்னெடுத்துள்ளது.

60ஆம் ஆண்டு அடையாளச் சின்னத்தின் பின்னால் இருக்கும் சிந்தனை செயல்முறையை பின்வருமாறு விளக்கலாம். 60 ஆண்டுகளுக்குள் காணப்படும் 2 வளையங்கள் குழுவின் எல்லையற்ற முழுமையைக் குறிக்கின்றதுடன் அதன் இடைத்தொடர்பின் மூலம் குழுமத்தால் பங்குதாரர்களின் சிறப்பான ஈடுபாட்டிற்கான அதன் உறுதிபாட் டினை எடுத்துக்காட்டுகின்றது.

முழுமையான அலை அலையான அமைப்பானது, குழுமத்தின் பன்முகத்தன்மையையும் உலகளாவிய சந்தையின் மாற்றத்திற்கேற்ப சிறந்து விளங்கும் அதன் தன்மையையும் குறிக்கின்றது.

2022 டிசெம்பர் 9ஆம் திகதி அலுவலகத்தின் தலைமைக் காரியாலயத்தில் இந்த விசேட நிகழ்வின் நினைவாக ஒரு எளிய விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அனுப்பியவர் தலைமை செய்திகள்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)