சைக்கிள் வண்டிகள்

சைக்கிள் வண்டிகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » சைக்கிள் வண்டிகள்

ஐரோப்பிய சந்தையில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற கேள்வியை ஈடுசெய்யும் வகையில் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் 15 ஆண்டுகளுக்கும் மேலாக துவிச்சக்கர வண்டிகளை தயாரித்துவருகின்றது. பாவனைக்கான உயர் ரக துவிச்சக்கர வண்டிகள் பெயர்பெற்று விளங்குகின்ற வர்த்தகநாமங்களின் கீழ் உற்பத்திசெய்யப்பட்டு, பொருத்தப்படும் பல்வேறு செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக இத்தகைய ஒப்பந்த அடிப்படையிலான செயற்பாடுகளை பெருமையுடன் முன்னெடுத்து வருகின்றோம்.

எமது வாடிக்கையாளர்களுடன் உறுதியான உறவுமுறைகளைப் பேணவேண்டும் என்ற ஆவலின் உந்துசக்தியுடன் அதியுயர் தரத்திலான உற்பத்திகளை அவர்களுக்கு வழங்கும்போது நம்பகமான மற்றும் விசுவாசம்மிக்க சேவைகளை வழங்குகின்றோம். தனித்துவமும், இயக்க வலிமையும் மிக்க இத்தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் செயற்பாட்டாளராக விளங்குவதை தொடர்ந்தும் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம்.

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

1998 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு முன்னணி உற்பத்தி நிறுவனமான சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், நச்சு மூலப்பொருட்கள் எதுவும் இல்லாத உயர் மட்டத்திலான பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதத்துடன் துவிச்சக்கரவண்டிகளை தயாரித்து வருகின்றது. எமது நிறுவனம் வருடம்தோறும் அண்ணளவாக 300,000 துவிச்சக்கரவண்டிகளை தயாரித்துவருவதுடன், எமது உற்பத்தி வரிசைகளில் Mountain, Street, Folding, BMX மற்றும் சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் அடங்கியுள்ளன.