டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » பாதணி » டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புடமை நிறுவனமான டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் 1962 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் பாதணிகளை உற்பத்திசெய்து, விற்பனைசெய்வதில் சந்தையில் முதல் ஸ்தானத்தில் திகழும் நாம், முன்னிலை வகிக்கும் ஏற்றுமதியாளர்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றோம். இலங்கையில் ISO 9001:2008 சான்று அங்கீகாரத்தைப் பெற்றுக்க்கொண்ட முதலாவது சப்பாத்து உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ள பெருமை டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்திற்கு உரித்தானது.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என முழுக் குடும்பத்தினருக்கும் உரிய பாதணிகள் மற்றும் இறப்பர் மற்றும் EVA செருப்புக்களை டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் உற்பத்திசெய்வதுடன், டி. சாம்சன் அன்ட் சன்ஸ் லிமிட்டெட் நிறுவனம் நாடளாவியரீதியிலுள்ள தனது காட்சியறைகள் மற்றும் முகவர் வலையமைப்பினூடாக அப்பாதணிகளை விநியோகித்து வருகின்றது.

ஆரம்பம் முதல் இன்று வரை பேணிவருகின்ற அதியுயர் தர நடைமுறைகளின் விளைவாக கடந்த காலங்களில் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை நிறுவனம் கட்டியெழுப்பியுள்ளது. நிறுவனம் தற்போது ஆண்டுதோறும் 27.5 மில்லியன் சோடிகளுக்கும் அதிகமான பாதணிகளை உற்பத்திசெய்வதுடன், 2.200 இற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டுள்ளது. DSI பாதணிகள் அனைத்தும் PVC உட்செலுத்தல், வடிவமைப்பு இயந்திரங்கள், EVA உட்செலுத்தல் இயந்திரங்கள், PVC V-Strap இயந்திரங்கள், PVC தனி உட்செலுத்தல் இயந்திரங்கள் மற்றும் நீர் அழுத்தல் முறைகள் போன்ற நவீன இயந்திரங்கள் மற்றும் சாதனங்களின் இணைப்புடன் EVA, PVC/இறப்பர் உட்செலுத்தல் மற்றும் நேரடி வல்கனைசிங் என நவீன தொழில்நுட்பத்துடன், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட 4 பாரிய நவீன உற்பத்தி வசதிகளை உபயோகித்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

எளிய பிளிப்-ப்ளொப் வகை பாதணிகள், காலணிகள், இறப்பர் பூட்ஸ் காலணிகள், லெதர் தோல் சப்பாத்துக்கள், பாடசாலை உபயோக சப்பாத்துக்கள், தொழிற்சாலை உபயோக சப்பாத்துக்கள், விவசாயத்துறை உபயோக சப்பாத்துக்கள், வீட்டினுள் அணியும் செருப்புக்கள், கித்தான் (கன்வஸ்) சப்பாத்துக்கள்

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

தோல், PVC/PU துணி வகைகள், கன்வஸ், PVC கலவைகள், EVA, இறப்பர் இரசாயனங்கள், ஒட்டுப்பசைகள், சப்பாத்து அடிப்பாகங்கள் மற்றும் ஏனைய பாதணி பாகங்கள்.

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

இந்தியா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், இத்தாலி, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சலாந்து, ஸ்பெயின், அவுஸ்திரியா, மாலைதீவு, சவுதி அரேபியா, இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

திரு. துமிந்த லந்தெவத்த
சர்வதேச சந்தைப்படுத்தல் முகாமையாளர்

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
டி சாம்சன் ராஜபக்ச மாவத்தை
பத்தடுவ
காலி 80000
இலங்கை.

தொலைபேச: +94 (0) 91 2234597, +94 (0) 91 2234599
தொலைநகல்: +94 (0)91 2234182
மின்னஞ்சல்: info@dsifootwear.com
இணையத்தளம்: www.dsi.lk