சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » பாதணி » சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

DSI குழுமத்தின் ஒரு அங்கமான சாம்சன் மனுபக்‌ஷர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் 1981 ஆம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தரமான பாதணிகளை உற்பத்திசெய்து வருகின்றது. Ranpa மற்றும் Ranreka ஆகிய வர்த்தகநாமங்களின் கீழ் வெளிவருகின்ற எமது உற்பத்திகள் 175 இற்கும் மேற்பட்ட DSI சில்லறை விற்பனை நிலையங்களிலும், 2,000 இற்கும் மேற்பட்ட பல்வர்த்தகநாம விற்பனை நிலையங்களிலும் கிடைக்கப்பெறுகின்றன. Ranpa வர்த்தகநாமத்தின் விநியோகமானது எமது சக நிறுவனமான டி சாம்சன் அன்ட் சன்ஸ் லிமிட்டெட்டின் மூலமாக மேற்கொள்ளப்படுவதுடன், Ranreka ஆனது பல்வர்த்தகநாம விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

Stranger, Oriyent, Sweet Girl மற்றும் G Force போன்ற உப வர்த்தகநாமங்களையும் நாம் உற்பத்திசெய்து வருகின்றோம். பிரபல உற்பத்தியாளர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாகங்களைப் பொருத்தி இவை தயாரிக்கப்படுவதுடன், சௌகரியம், நவநாகரிகம் மற்றும் நியாயமான விலை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உற்பத்தி நிலையமானது கொழும்பு நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுடன், கொழும்பு துறைமுகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இலகுவாக அடையக்கூடிய அமைவிடத்தில் உள்ளது. அதிசிறந்த உற்பத்திகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டுள்ளதுடன், தனது சொந்த EVA உற்பத்தி இயந்திரம், PVS துணி இயந்திரம் மற்றும் தனி மற்றும் இரட்டை வர்ண ஏற்றல் வார்ப்பு இயந்திரங்களுடன், மாதாந்தம் 250,000 சோடிகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

உற்பத்தி வரிச

Ranpa/Ranreka வர்த்தகநாம ஆண்களுக்கான காலணிகள் மற்றும் செருப்புக்கள், Ranpa/Ranreka பெண்களுக்கான காலணிகள் மற்றும் செருப்புக்கள், Ranpa/Ranreka குழந்தைகளுக்கான காலணிகள் மற்றும் செருப்புக்கள், Ranpa/Ranreka சிறுவர்களுக்கான காலணிகள் மற்றும் செருப்புக்கள், STRANGER வர்த்தகநாம உயர் தர விளையாட்டுக் காலணிகள், Oriyent வர்த்தகநாம ஆண்களுக்கான உயர் தர செருப்புக்கள், Y CLUB வர்த்தகநாம ஆண்களுக்கான செருப்புக்கள், Sweet Girl வர்த்தகநாம பெண்களுக்கான செருப்புக்கள், Velocity வர்த்தகநாம ஆண்களுக்கான சப்பாத்துக்கள், P.V.C இறப்பர் செருப்புப் பட்டிகள், E.V.A தாள், P.V.C செருப்பு அடிப்பாகங்கள், E.V.A தொடர்பான உற்பத்தி.

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

இறக்குமதி பொருட்கள்

PVC துணி, PVC, PU அடிப்பாகங்கள், ஒட்டுப்பசைகள், PVC, EVA சேர்மப்பொருள், Eva பெயின்டிங் மை, சப்பாத்துப் பாகங்கள் மற்றும் சாதனங்கள், இறப்பர் இரசாயனம்.

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள்

Papua New Guinea, Dubai and Maldives

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சர்வதேச பங்காளர்கள்

Bostik Findley, Shanghavi,
Central Leather Research Institute,
Footwear Design and Development Institute (India)

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தொடர்பு விபரங்கள்

Mr. Asiri Bandara Subasinghe
Assistant Manager (Sales & Design Creation)

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
No 26, Ranmuthugala Estate
Gonahena
Kadawatha
Sri Lanka.

தொலைபேச: +94 (0)11 2970780, +94 (0)11 2970781, +94 (0)77 2910100, +94 (0)77 7815530
தொலைநகல்: +94 (0)11 2968326
மின்னஞ்சல்: asiri@ranpa.lk
இணையத்தளம்: http://www.ranpa.lk