பாதணி

பாதணி
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » பாதணி

பாதணி தொழிற்துறையில் ஒரு முன்னோடியான DSI சாம்சன் குழுமம் வளர்ந்தவர்களுக்கு உகந்த பல்வேறு வகைப்பட்ட செருப்புக்கள் மற்றும் காலணிகளை உற்பத்திசெய்வதுடன், இளம் தலைமுறையினருக்கு விநோதமான மற்றும் சௌகரியமான உற்பத்திகளையும் உற்பத்தி செய்துவருகின்றது. புத்தாக்கம்மிக்க எமது படைப்புக்கள் வழமையான இறப்பர் செருப்பு என்ற ஸ்தானத்திலிருந்து நீண்ட தூரம் பயணித்து தற்போது இலங்கையின் நவநாகரிக தொழிற்துறையில் பிரதான அங்கமாக மாறியுள்ளது.

எமது துணை நிறுவனமான டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மூலமாக உயர் தொழில்நுட்ப உட்செலுத்தல் வடிவமைப்பு இயந்திரத்தொகுதியை உபயோகித்து பாடசாலை மற்றும் விளையாட்டு உபயோகத்திற்கான சப்பாத்துக்களை விசேடமாக வடிவமைத்து வருகின்றோம். நாம் செய்யும் அனைத்து விடயங்களிலும் மிக நவீன வடிவங்களைத் தழுவி நிற்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு நாம் புதிதாதக் கொள்வனவு செய்துள்ள EVA உட்செலுத்தல் இயந்திரம் இலங்கையில் காணப்படும் இந்த வகையிலான ஒரேயொரு இயந்திரமாக உள்ளது.

சாம்சன் DSI குழுமத்தின் முதலாவது உற்பத்தி என்ற வகையில் எமது 50 வருட வரலாற்றில் பாதணி உற்பத்திகள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதுடன், பாதணி தொழிற்துறையில் முன்னிலை வகிக்கவேண்டும் என்பதில் நாம் எப்போதும் கண்ணும்கருத்துமாய் உள்ளோம்.

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

ISO 9001:2008 சான்று அங்கீகாரத்துடன் இலங்கையிலுள்ள ஒரு முன்னணி பாதணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என்ற சிறப்பைக் கொண்டுள்ள டி சாம்சன் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (DSI) 1962 ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது பாதணி உற்பத்தி நிலையத்தை நிறுவியிருந்தது. தினந்தோறும் 60,000 சோடிகளுக்கும் அதிகமான பாதணிகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் 1,500 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் மனுபெக்சர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

1981 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உயர் தரத்திலான சாதாரண பாதணி வகைகளை உற்பத்திசெய்து வருவதுடன், ‘Ranpa’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் 175 இற்கும் மேற்பட்ட DSI விற்பனை நிலையங்கள் மற்றும் 2,000 இற்கும் மேற்பட்ட பல்வர்த்தகநாம விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்துவருகின்றது. சாம்சன் மனுபெக்சர்ஸ் நிறுவனம் தனது சொந்த EVA மற்றும் PVC துணி இயந்திரங்கள் மூலமாக மாதாந்தம் அண்ணளவாக 250,000 சோடி பாதணிகளை உற்பத்தி செய்துவருகின்றது.