
சப்பாத்துக்கள், பாதணி பாகங்கள், ஆடையணி போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது துணை நிறுவனங்களான டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட் ஆகியன பிரதானமாக பல பிரபலமான பாதணி மற்றும் ஆடைத்தொழிற்துறை விநியோகத்தர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தி, விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளன. தாராளமான களஞ்சிய வசதிகள், விசாலமான விநியோக வலையமைப்பு, நாடளாவியரீதியில் 200 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் ஆகியவற்றின் துணையுடன் இந்த இரு துணை நிறுவனங்களும் இலங்கையில் சில்லறை வியாபாரம் மற்றும் வாணிபம் ஆகிய தொழிற்துறைகளில் DSI சாம்சன் குழுமம் வகிக்கும் ஸ்தானத்தை மேம்படுத்துவதில் பூரண அர்ப்பணிப்புடன் தொழிற்பட்டு வருகின்றன.
டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் DSI, Ranpa மற்றும் Samsons பாதணிகள் போன்ற பல பிரபலமான வர்த்தகநாமங்களின் ஏகபோக விநியோகத்தராக திகழ்வதுடன், RBK மற்றும் Fila விளையாட்டு உபயோக சப்பாத்துக்கள், Proline ஆடையணி யணி மற்றும் PEPE ஜீன்ஸ் ஆகிய வர்த்தகநாமங்களின் ஏகபோக முகவர்களாகவும் திகழ்கின்றது. எமது நவீன தீர்வுகளில் பாதணி தொடர்புபட்ட பாகங்களின் விநியோகமும் மற்றும் சாம்சன் டிரேடிங் கம்பனி (பிரைவேட்) லிமிட்டெட் ஊடாக இடம்பெறுகின்ற மூலப்பொருட்களின் விநியோகமும் உள்ளடங்கியுள்ளன.
DSI சாம்சன் குழுமத்தின் முன்னோடி ஸ்தாபனமும், இலங்கையில் பாதணிகளின் சந்தை முன்னோடியாகவும் திகழ்கின்ற டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் தனது சொந்த வர்த்தகநாமத்தின் கீழான ஆடையணி, பாதணி மற்றும் சர்வதேச பாதணி வர்த்தகநாமங்களின் ஏகபோக விநியோகத்தராகவும் திகழ்கின்றது. நிறுவனத்தினால் நிர்வகிப்படும் 200 காட்சியறைகளை டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் தொழிற்படுத்தியுள்ளதுடன், நாடளாவியரீதியில் 4,000 இற்கும் மேற்பட்ட முகவர்களையும், 50 விற்பனைப் பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது.
1978 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனம் இலங்கையிலும், சர்வதேசரீதியாகவும் பாதணி உற்பத்திகள், EVA மற்றும் இறப்பர் உற்பத்திகள், இரசாயனப் பொருட்கள் மற்றும் Bitumix உற்பத்திகளை விநியோகித்து, விற்பனை செய்துவருகின்றது.
DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.
தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)