களிமண் ஓடுகள்

களிமண் ஓடுகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » களிமண் ஓடுகள்

உங்களுடைய இல்லத்திற்கு உயர் தரத்திலான கூரை மற்றும் தரை ஓடுகளை வழங்கும் சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், அனுராதபுரத்தைச் சூழவுள்ள மனிதனால் ஆக்கப்பட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கையான களிமண்ணிலிருந்து ஜப்பானிய நவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து கவர்ச்சியான ஒடுகளை உற்பத்தி செய்து வருகின்றது
சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ள நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உதவியுடன் இத்துறையிலுள்ள ஏனைய தொழிற்சாலைகளை விடவும் அதிசிறந்த உற்பத்திகளை வழங்கிவருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளவாறு அஸ்பெஸ்டஸ் தகடுகளின் ஆபத்தை தெளிவாக இனங்கண்ட எமது ஆராய்ச்சி அணி சுகாதாரரீதியாக எவ்விதமான ஆபத்துக்களையும் விளைவிக்காத களிமண் ஒடுகளை உற்பத்திசெய்ய வழிகோலியுள்ளதுடன், அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தர நடைமுறைளைக்கும் இணங்குவதாக அமைந்துள்ளது.

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் ரஜரட்ட டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கமைவாக, 100% இயற்கையான (எவ்விதமான இரசாயன பயன்பாடுகளுமற்ற), குளிரூட்டும் பண்பைப் கொண்டுள்ள, ஆரோக்கியம் தொடர்பான அக்கறை கொண்ட, இலகுவில் உடையாத, குறைந்த அளவில் தண்ணீரை உறிஞ்சுகின்ற (10% இற்கும் குறைவாக), தண்ணீர் குறைந்த அளவில் ஊடுருவுகின்ற, பின்னிய முறைமையைக் கொண்ட, ஜப்பானிய துப்பாக்கிச் சூட்டு முறைமைக்கு கீழ்ப்படுகின்ற., எவ்விதமான மறைமுகமான நிபந்தனைகளுமற்ற உற்பத்திகளை நிறுவனம் வழங்கிவருகின்றது.