பொறியியல் துறை

பொறியியல் துறை
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » பொறியியல் துறை

DSI சாம்சன் குழுமம் மற்றும் எமது ஏனைய துணை நிறுவனங்களினால் உபயோகிக்கப்படுகின்ற இயந்திரத்தொகுதிகளை பேணவேண்டியதன் மகத்தான தேவையை உணர்ந்து நாம் பொறியியல் துறையிலும் காலடியெடுத்து வைத்திருந்தோம். பிரமாண்டமான தொழிற்துறை அளவிலான இறப்பர் கலக்கும் இயந்திரத் தொகுதிகள் முதல் சாதாரண தையல் இயந்திரங்கள் வரை அனைத்தையும் சாம்சன் இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் அபிவிருத்தி செய்து, திருத்த வேலைகளை மேற்கொண்டு, எமது உற்பத்தி இயந்திரத் தொகுதிகள் அனைத்தினதும் பொறியியல் அம்சங்களை பேணும் சேவையை முன்னெடுத்துவருகின்றது.

அண்மைய கால முதலீடுகளில் மென்பொருள் மற்றும் இறப்பர் மற்றும் பிளாஸ்திக்கு உற்பத்தி தொழிற்துறைகளில் விசேடமாக உபயோகிக்கப்படுகின்ற வார்ப்புக்கள், மைகள் போன்றவற்றை வடிவமைத்து, உற்பத்தி செய்கின்ற கணினி எண் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் போன்ற துல்லியமான கணித்தல் இயந்திரங்கள் அடங்கியுள்ளன. சாம்சன் இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம், சாம்சன் குழுமத்தின் மத்தியில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கும் உயர் நிபுணத்துவம் கொண்ட ஒரு நிறுவனமாகத் திகழ்கின்றது.

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இன்ஜினியர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் இலங்கையில் பல்வேறுபட்ட பொறியியல் துறை சேவைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும். குடிசார் பொறியியல், பண்ட இடம்மாற்று சேவை (இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு காவிச்சேவை நிறுவனம்), இயந்திரவியல் பொறியியல், இலத்திரனியல் பொறியியல் மற்றும் வாகன பொறியியல் போன்ற சேவைகள் அவற்றுள் பிரதானமானவையாக உள்ளன.