சேவைகள்

சேவைகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » சேவைகள்

எமது நிறுவனத்தைப் போன்ற பாரிய கூட்டு நிறுவனமொன்றின் சீரான தொழிற்பாட்டிற்கு பல்வேறு இணைச் சேவைகள் அத்தியாவசியமாக உள்ளன. இத்தகைய சேவைகளை ஒரு அடிப்படைச் சேவையாக நாம் கருதுகின்ற போதிலும் அவற்றிற்கும் விசேட ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் ஒட்டுமொத்த குழுமத்தின் சார்பில் அதன் செயற்பாடுளை திறன்மிக்க வழியில் முன்னெடுப்பதற்கு அனைத்து நிபுணத்துவத்தையும் கொண்ட நிறுவனம் ஒன்று அவசியம் என நாம் கருதினோம். இதுவே சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் உதயமாகுவதற்கு காரணமாக அமைந்தது. பல DSI கூட்டு நிறுவனங்கள் மத்தியில் எவ்விதமான சிக்கல்களுமின்றிய தொழிற்பாடுகளுக்குத் தேவையான பல்வேறு விசேட நிபுணத்துவ ஆற்றல்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கை DSI சாம்சன் குழுமத்தைப் பொறுத்தவரையில் பாரிய வெற்றியை அளித்துள்ளது.

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் குறூப் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் ஏனைய கூட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மூலோபாயத் திட்டமிடல் மற்றும் நிதி முகாமைத்துவ சேவைகள் மற்றும் இறக்குமதிகள், ஏற்றுமதிகள், சட்ட சேவைகள், தகவல் தொழில்நுட்பம், காப்புறுதி, நிதி மற்றும் திறைசேரி தொழிற்பாடுகள் ஆகியவற்றைக் கையாளுகின்ற விசேட திணைக்களங்களுடன் உட்கட்டமைப்பு முகாமைத்துவ சேவைகளையும் வழங்குகின்றது. இதன் மூலமாக கூட்டு நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளின் முக்கிய தொழிற்பாடுகள் அல்லாத அம்சங்களை அவை சார்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதன் மூலமாக போட்டித்திறன் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.

சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

2008 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சாம்சன் இன்ஷுரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் அனைத்து வகையான பொதுக் காப்புறுதி வியாபாரங்களையும் முகாமைத்துவம் செய்வதுடன், உங்களது காப்புறுதித் தேவைகள் அனைத்தையும் நியாயமான கட்டணங்களில் ஏற்பாடு செய்து தருகின்றது. உங்களுடைய காப்புறுதித் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ள அர்ப்பணிப்பு மிக்க அணியை நாம் கொண்டுள்ளதுடன், ஆபத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து அம்சங்கள் தொடர்பான விபரங்களை அவர்கள் உங்களுக்கு உரிய நேரத்தில் அறியத்தந்து, அவற்றை செலவு குறைந்த வகையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்குவர் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்குகின்றோம்.