உணவு, பானவகை மற்றும் விவசாயம்

உணவு, பானவகை மற்றும் விவசாயம்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » உணவு, பானவகை மற்றும் விவசாயம்

இலங்கையில் தனித்துவமான பாத்திரங்களை வகிக்கும் இரு துணை நிறுவனங்கள் மூலமாக DSI சாம்சன் குழுமம் உணவு, பானவகை மற்றும் விவசாயத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளது.

Mount Spring Water (Pvt) Ltd நிறுவனம் புத்துணர்ச்சி தரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு மிகவும் பெயர்போனது. SLS, ISO சுகாதார அமைச்சின் சான்று அங்கீகாரம் போன்ற தரப்படுத்தல் சான்று அங்கீகாரங்களை சம்பாதித்துள்ள போத்தலில் அடைக்கப்பட்ட எமது குடிநீர் மிகவுயர்ந்த சர்வதேச தர நடைமுறைகளின் கீழ் தயாரிக்கப்படுவதுடன், தற்போது பல்வேறு வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றது.

பழங்களை அறுவடை செய்யும் பாரியளவிலான பண்ணைகளை SRG Holdings (Pvt) Ltd நிறுவனம் நிர்வகித்து வருகின்றது, எமது பண்ணைகளில் உயர்ந்த செயற்திறன் மடங்குகளைப் பேணுவதற்கு இடமளிக்கும் நவீன விஞ்ஞான விவசாய முறைமைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் சூழலுக்கு தீங்கிளைக்காத உற்பத்தி நடைமுறைகளை நாம் உபயோகித்து வருவதுடன், சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து அறுவடைக்குப் பின்னர் மிகச் சிறந்த நடைமுறைகளையும் பின்பற்றிவருகின்றோம். இது எமது கழிவு மட்டங்களை தொழிற்துறையின் சராசரிக்கும் குறைவாகப் பேணவும் இடமளிக்கின்றது.

எமது பண்ணைகள் தூர பிரதேசங்களில் அமைந்துள்ளன. இதன் மூலமாக அப்பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவிவருகின்றோம்.

SRG Holdings (Pvt) Ltd

SRG Holdings (Pvt) Ltd

தரமான பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகள், பருப்பு வகைகள் மற்றும் வாசனைத் திரவியங்கள், பதனிடப்பட்ட உணவுகள் மற்றும் பானவகைகளை உற்பத்திசெய்து, சந்தைப்படுத்தி வருகின்ற SRG holdings பெருந்தோட்டம் மற்றும் SLS சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஊற்று நீர் வர்த்தகநாமமான Mount Spring இனையும் தயாரித்து விநியோகித்து வருகின்றது..

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

மவுண்ட் ஸ்ப்ரிங் வாட்டர் தனியார் வரையறுக்கப்பட்ட

2004 இல் நிறுவப்பட்ட Mount Spring Water (Pvt) Ltd நிறுவனம் இலங்கையில் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கொண்டுள்ள, முற்றிலும் தன்னியக்கமயமாக்கப்பட்ட, சுத்தமான நவீன உற்பத்தி நிலையத்தின் மூலமாக குடிநீரை போத்தலில் அடைத்து விநியோகித்து வருகின்றது.