டயர் மற்றும் ரியூப் உற்பத்திகள்

டயர் மற்றும் ரியூப் உற்பத்திகள்
நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » துறைகள் » டயர் மற்றும் ரியூப் உற்பத்திகள்

உலகின் மகத்தான கண்டுபிடிப்பு அம்சங்களில் ஒன்றான சில்லின் கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. ஆயினும் DSI சாம்சன் குழுமத்தின் டயர் மற்றும் ரியூப் வியாபாரப் பிரிவின் பாரிய சாதனைகளில் எவ்விதமான இரகசியங்களும் கிடையாது. படைப்பாக்கத்திறன் மற்றும் உன்னிப்பான அவதானம் ஆகியவற்றின் சிறப்புக்களுடன் சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் Vechenson (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் உற்பத்திகள் அவற்றின் உயர் தரத்திற்காக சர்வதேசரீதியாக இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளன. இந்த இரு துணை நிறுவனங்களும் அவற்றின் காற்றடைத்த டயர்கள் மற்றும் ரியூப் உற்பத்திகளின் வடிவமைப்பு, புத்தாக்கம், தயாரிப்பு மற்றும் விற்பனை சிறப்பு அம்சங்களுக்காக DNV Netherlands அமைப்பினால் ISO 9001:2000 சான்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.

குழுமத்தின் பிரதான வியாபாரப் பிரிவுகளுள் ஒன்றாகத் திகழ்கின்ற இந்நிறுவனம் துவிச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், தொழிற்சாலை பயன்பாடு, விவசாய பயன்பாடு மற்றும் புல்வெளிகள் மற்றும் வீட்டுத்தோட்ட பயன்பாட்டு வாகனங்களுக்குத் தேவையான டயர்களையும், ரியூப்களையும் உற்பத்தி செய்துவருகின்றது.

வெச்சென்சன் (பிரைவேட்) லிமிட்டெட்

வெச்சென்சன் (பிரைவேட்) லிமிட்டெட்

ஏற்றுமதி இலக்குடன், துவிச்சக்கரவண்டி டயர்கள் மற்றும் ரியூப்களை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ISO 9001: 2008 சான்று அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு நிறுவனமான இது நவீன டயர் உற்பத்தி இயந்திரத் தொகுதியைக் கொண்டுள்ளது. விவசாய பயன்பாட்டு வாகனங்கள், துவிச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான டயர்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் விசேட நிபுணத்துவம் பெற்றுள்ளது.

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

சாம்சன் இறப்பர் இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் ஆனது காற்றடைத்த டயர்கள் மற்றும் ரியூப்களை உற்பத்தி செய்வதற்காக DSI சாம்சன் குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாக 1983 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. எமது உற்பத்திகள் அனைத்தும் DSI வர்த்தகநாமத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன. துறைமுக மற்றும் விமானநிலைய வசதிகளை இலகுவாகப் பெற்றுக்க்கொள்ளும் அமைவிடத்தில் இந்நிறுவனம் தொழிற்பட்டு வருகின்றது.