செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » March 2015

தனது முகவர்களுக்கான மாநாடுகள் மற்றும் பாராட்டு நிகழ்வுகளை மாத்தளை, கண்டி மற்றும் குருணாகல் ஆ

வெளியிட்ட நாள் 6 March, 2015

நாடெங்கிலும் தனது வலையமைப்பின் கீழுள்ள 3,800 இற்கும் மேற்பட்ட முகவர்களைப் பாராட்டும் முகமாக இரு முகவர் மாநாடுகளை மாத்தளை, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் DSI ஏற்பாடு செய்திருந்தது. தனது முகவர்களுடன் சிறந்த உறவுமுறைகளைப் பேணுவதற்கு முக்கிய இடம் கொடுத்துள்ள நிறுவனம், அவர்கள் DSI வர்த்தகநாமத்திற்கும், டி சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்திற்கும் ஆற்றிவருகின்ற அளப்பரிய பங்களிப்புக்கள் மற்றும் அர்ப்பணிப்படனான ஈடுபாட்டிற்காக அவர்களைப் போற்றியுள்ளது. முகவர்களுடனான உறுதியான உறவுமுறையே வருமானம் முதல் வாடிக்கையாளர் தளம் வரை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றன.தனது முகவர்களைச் சந்தித்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்காக நாட்டில் பல இடங்களிலும் வருடாந்தம் மாநாடுகளை நிறுவனம் ஏற்பாடு செய்துவருகின்றது. இந்த ஆண்டில் மாத்தளை மற்றும் கண்டியிலுள்ள முகவர்களுக்கான மாநாடு பெப்ரவரி 26 அன்று கண்டியிலுள்ள கிரான்ட் கண்டியன் ஹோட்டலிலும், குருணாகலிலுள்ள முகவர்களுக்கான மாநாடு மார்ச் 3 அன்று கண்டியன் றீச் ஹோட்டலிலும் இடம்பெற்றன. இந்த ஆண்டு மாநாடுகள் ‘வெற்றிக்கான பந்தயம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றதுடன், இந்த மாநாடுகளில் பாரிய எண்ணிக்கையிலான முகவர்கள் கலந்துகொண்டு அவை வெற்றிகரமாக இடம்பெறுவதை உறுதிசெய்தனர்.இந்த ஆண்டில் மாத்தளை, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிராந்தியங்களில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மிகச் சிறந்த 30 முகவர்களுக்கு இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பாராட்டும், கௌரவமும் அளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிற்கான மாநாடுகளில் டி சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. நந்ததாச ராஜபக்ச, பொது முகாமையாளரான திருமதி. கௌஷல்யா பெரேரா, விற்பனைகளுக்கான தலைமை அதிகாரியான திரு. அசங்க ராஜபக்ச, உதவிப் பொது முகாமையாளரான திரு. நிஷாந்த் கமாச்சி மற்றும் அந்நிறுவனத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர் நிறுவனம் மற்றும் அதன் உற்பத்தி வகைகள் தொடர்பான அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல், முகவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டு அவர்களது பிரச்சனைகள் மற்றும் இன்னல்களைக் கேட்டறிந்து கொள்ளுதல், 2014 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட முகவர்களைப் பாராட்டிப் போற்றுதல் ஆகியனவே இம்மாநாடுகளின் பிரதான நோக்கமாக அமையப்பெற்றது. மேலும் முகவர்கள் நெருக்கடிகளும், வேலைப்பழுவும் நிறைந்த அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று ஓய்வாக மகிழ்வுடன் பொழுதைப் போக்கும் வாய்ப்பும் இதன் மூலமாக அவர்களுக்குக் கிட்டியது. இந்த நோக்கத்திற்கு அமைவாக மாநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட தனிப் பாடல் மற்றும் நடன நிகழ்வுகளை முகவர்கள் வெகுவாக அனுபவித்து மகிழ்ந்தனர் இந்நிகழ்வுகளின் மணிமகுடமாக அமைந்த நவநாகரிக அணிநடை கண்காட்சி நிகழ்வுகள் மிகவும் கவர்ச்சியமாக அமையப்பெற்றதுடன், DSI, Ranpa மற்றும் Samson சின்னங்களின் கீழ் வெளிவரும் புத்தம்புதிய பாதணி வடிவமைப்புக்கள் இதில் அடங்கியிருந்தன. DSI வழங்கும் உற்பத்தி வகைகள் மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் வெளிவரவுள்ள புதிய அறிமுகங்கள் தொடர்பில் முகவர்கள் தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இது அவர்களுக்கு வழங்கியிருந்தது.

அனுப்பியவர் டி. சாம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)