செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்புப் பக்கம் » செய்திகள் » October 2014

DSI சைக்கிள் காட்சியறை பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

வெளியிட்ட நாள் 30 October, 2014

2014 ஒக்டோபர் 24 அன்று இல. 225 A-D, காலி வீதி, கொழும்பு 04 என்ற முகவரியில் DSI சைக்கிள் காட்சியறை ஒன்றை திறந்துவைத்துள்ளதை அறிவிப்பதில் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் பெருமை கொள்கின்றது. முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ரணதுங்க ராஜபக்ச அவர்கள் திறப்பு விழா நிகழ்வில் பிரதான விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பணிப்பாளர்களான திரு. கவிந்த ராஜபக்ச, திரு. சஜித் ராஜபக்ச, திரு. எஸ்.பி. வெலிவிட்ட மற்றும் திரு. அபேதிலக மற்றும் சாம்சன் றப்பர் இன்டஸ்ரிஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரான திரு. நந்தசேன மற்றும் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளரான திருமதி. திசாநாயக்க மற்றும் சாம்சன் றப்பர் இன்டஸ்ரிஸ் லிமிட்டெட் மற்றும் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இது சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் மிகப் பாரிய சைக்கிள் காட்சியறையாகத் திகழ்வதுடன், கவர்ச்சியான சைக்கிள் சந்தையில் ஒரு திருப்புமுனையாகவும் மாறியுள்ளது. திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ரணதுங்க ராஜபக்ச அவர்கள் சைக்கிள் சவாரியின் நன்மைகள் தொடர்பில் வலியுறுத்தினார். சைக்கிளை விரும்புகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யும் வகையில் பலதரப்பட்ட உயர்ந்த தரம் கொண்ட சைக்கிள்களை அறிமுகப்படுத்துவதற்கு சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. போலந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகத் திகழும் Kross சைக்கிள்களை இந்த காட்சியறையில் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விசேடமான டயர் மற்றும் டியூப் வகைகளும் இந்த சைக்கிள் காட்சியறையில் கிடைக்கப்பெறுகின்றன

அனுப்பியவர் சாம்சன் பைக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்

தலைமை அலுவலகம்

DSI சாம்சன் குழுமம்
இல.110
குமாரன் ரத்னம் வீதி
கொழும்பு 02
இலங்கை.

தொலை பேசி: +94 (0)11 21 31 800
தொலைநகல்: +94 (0)11 21 31 777
மின்னஞ்சல்: info@dsi.lk (பொது)